Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karumbu Juice Benefits in Tamil: தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தன நன்மைகளா…?

Nandhinipriya Ganeshan April 27, 2022 & 10:00 [IST]
Karumbu Juice Benefits in Tamil: தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தன நன்மைகளா…?Representative Image.

 Karumbu Juice Benefits in Tamil: கோடைக்காலம் தொடங்கி விட்டாலே சாலையோரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கரும்பு ஜூஸ் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வந்து விடும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலங்களில் நாம் கொஞ்சம் நேரம் வெளியில் சென்றாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.. எனவே, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மேற்கூரிய பொருட்களை அடிக்கடி எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தாக கருதப்படுகிறத். அதிலும், எல்லா சீசனிலும் கிடைக்கும் கரும்புப்பால் அல்லது கரும்புச்சாறு அல்லது கரும்பு ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பிடிக்காதவர்களே இருக்க முடியாது; அந்த அளவிற்கு அதன் தித்திக்கும் இனிப்பு சுவை அனைவரையும் கவர்ந்து இழுக்கும். அந்த வகையில், கரும்பு ஜூஸ் (Karumbu Paal Benefits in Tamil) குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கரும்பு ஜூஸில் மாங்கனீஸ், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. இதன் அதிக செறிவு கரும்பு சாற்றை இயற்கையில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. கரும்பு சாற்றில் மற்றொரு இயற்கை சத்தான ஃபிளாவனாய்டுகள் இருப்பதால், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. கரும்பு ஜூஸ் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்களுக்கு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. மேலும், இது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். அதுமட்டுமல்லாமல், இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்று நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.

ஒருவேளை உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இல்லாவிட்டாலும், தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்தால், செரிமான மண்டல அமைப்பை சீராக வைத்திருக்கும், கரும்பு ஜூஸில் இருக்கும் பொட்டாசியம் வயிற்றில் pH அளவை சமன் செய்து, அதிகளவு அமிலம் சுரப்பதை தடுத்து அசிடிட்டி பிரச்சனையில் இருந்து பாதுக்காக்கும். கரும்பு சாறில் (karumbu charu benefits in tamil) இயற்கையான சர்க்கரை காணப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உண்மையில் பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை குடிப்பதில் சற்று கவனம் தேவை. கரும்புச் சாற்றை அளவாக உட்கொள்ளும் போது அடிக்கடி அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவை தடுக்கிறது.

இதில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாத சோடியம் மற்ரும் கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, இது சிறுநீரகங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவிபுரிகிறது. கரும்பி ஜூஸில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன; இது பல்லிற்கு வலுவை தருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த சத்துக்களின் குறைப்பாட்டால் ஏற்படும் துர்நாற்றத்தையும் கரும்பு ஜூஸ் போக்குகிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கரும்பு ஜூஸை (karumbu benefits in tamil) தினமும் ஒரு கிளாஸ் வீதம் குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து இயற்கையாகவே அதிகரிக்கும் என்று மருத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்