Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Easy Yoga Asanas for Kids: ஈஸியா செய்யக்கூடிய யோகா…! இந்த யோகா செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும்?

Gowthami Subramani June 21, 2022 & 10:30 [IST]
Easy Yoga Asanas for Kids: ஈஸியா செய்யக்கூடிய யோகா…! இந்த யோகா செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும்? Representative Image.

Easy Yoga Asanas for Kids: 2014 ஆம் ஆண்டு மோடியின் ஆதரவால், யோகா தினம் கொண்டாடுவதற்கான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவால்  நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை 177 நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. அதன் படி, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது (Easy Yoga Asanas for Kids).

மிகச் சிறப்பாக

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா சூழ்நிலையால் யோகா தினம் சிறப்பாகக் கொண்டாட முடியாமல் போனது. வீட்டிலேயே யோகா செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனா தணிந்ததை அடுத்து, நாடு முழுவதும் மிகச் சிறப்பாக யோகா தினம் கொண்டாடப்படுகிறது (Easy Kid Yoga Poses for 2).

அனைவருக்கும் நலன்

யோகா என்பது உடலுக்கு மட்டும் மாற்றத்தை கொடுப்பது அல்ல. மனதிற்கும் மாற்றத்தைக் கொடுப்பதாகும். யோகா செய்வதற்கு முன்னும், யோகா செய்த பின்னும் நாம் பல்வேறு வகையான மாற்றங்களை அறிய முடியும். இந்த 2022 ஆண்டின் யோகா தினத்தின் கருப்பொருள் “மனிதகுலத்திற்கான யோகா” எனக் கூறப்பட்டுள்ளது. கருப்பொருளுக்கு ஏற்ற நல்ல பலன்களை அளிக்கக்கூடியதாக இந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது (Yoga Poses for Kids with Names).

குழந்தைகளுக்கான யோகா

யோகா அனைத்து விதமான பலன்களையும் தரவல்லது. உடல் எடை குறைத்தல், அதிகரித்தல், முகப் பொலிவு, சருமப் பொலிவு, உடலில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குதல் மற்றும் இன்னும் பிற அற்புதமான பணிகளை செய்யக் கூடியதாக யோகா உள்ளது. குறிப்பாக, யோகா செய்வதன் மூலம் மனப்பக்குவத்தை அடையலாம். குழந்தைகள் யோகா செய்வதால், அவர்களின் உடல் மற்றும் மூளை சுறுசுறுப்பாகி அனைத்து வகையான நன்மைகளையும் பெறுவர் (Standing Yoga Poses for Kids).

அதிலும் சிறு வயது முதலே யோகா கற்றுக் கொள்வதால், பல்வேறு விதமான நன்மைகளை அடைய முடியும். வாழ்வில் ஒரு சிறந்த பயணத்திற்கான வழியை அடையவும் யோகா ஒரு முக்கிய காரணமாக அமையும்.

குழந்தைகளுக்கான 5 யோகா ஆசனங்கள் (5 Easy Yoga for Kids)

உத்ராசனம் (Ustrasana Yoga Pose)

உத்ராசம் மூலம், குழந்தையை வலுப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் முடியும்.

A person doing yoga

Description automatically generated with low confidence

இந்த ஆசனத்தில், குழந்தையை தரையில் செங்குத்தாக மண்டியிட்டு கால்விரல்களைத் தவிர்த்து, கைகளை பின்னோக்கி நீட்டி அவர்களின் விரல்கள் குதிகாலைத் தொடுமாறு இருக்க வேண்டும் (Yoga Poses With Names).

இந்த ஆசனம் முதுகு மற்றும் தொடை தசைகளை கடினப்படுத்தும் மற்றும் சோம்பலை அகற்றும்.

மத்ஸ்யாசனம் (Matsyasana Yoga Pose)

இது குழந்தைகளுக்கான மற்றொரு சுவாரஸ்யமான ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்ய ஒருவர் தனது கை மற்றும் கால்களை ஒன்றாக இணைத்துக் கொண்டு முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும். படத்தில் உள்ளவாறு இதற்கான ஆசனத்தை செய்ய வேண்டும். இந்த ஆசனம் செரிமானம் மற்றும் இருதய அமைப்புகளை மேம்படுத்துமாறு உள்ளது.

தனுராசனம் (Dhanurasana Yoga Pose)

இந்த வகை ஆசனம் குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்கிறது. மேலும், அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த நிலையை அடைய குழந்தைகள் அவர்களது வயிற்றில் படுத்துக் கொள்ள வேண்டும். கால்களைத் தரையில் படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும். படத்தில் உள்ளவாறு இரண்டு கைகளைக் கொண்டு கால்களை இழுத்து பிடித்தவாறு வைக்க வேண்டும். இவ்வாறு 15-20 நிமிடங்கள் இருக்க வேண்டும். இந்த தனுராசனம் ஒருவரின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கக்கூடிய சிறந்த வழியாகும்.

பாலாசனம் (Balasana Yoga Pose)

A picture containing text

Description automatically generated

குழந்தைகள் எளிதில் செய்யக்கூடிய யோகாசனத்தில் பாலாசனமும் ஒன்று. முழங்கால்களைத் தட்டையாக வைத்து, கைகளை நீட்டி, விரல்களையும் நெற்றியையும் தரையில் ஊன்றி சுமார் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். இது மன அமைதியை அளிக்கக்கூடிய ஆசனமாகும்.

கோமுகாசனம் (Gomukhasana Yoga Pose)

இதனை சரியாகப் பயிற்சி அளிப்பதன் மூலம் முறையான பலனைப் பெறலாம். இதன் மூலம் தோள் பட்டை மற்றும் இடுப்புப் பகுதியில் இருந்து விறைப்புத் தன்மையை விடுவிக்க உதவுகிறது. இதில், ஒருவர் தனது இரண்டு முழங்கால்களையும் நீட்டி தரையில் நிமிர்ந்து உட்கார வேண்டும். அதன் பின், இடது முழங்காலை வளைத்து, வலது காலை இடது தொடையில் மேல் வைக்க வேண்டும்.

பின், இரு கைகளையும் பின்னால் இருந்து, கைகள் சந்திக்கும் வரை நீட்ட வேண்டும்.

வாழ்வில் சகிப்புத்தன்மை, பொறுமை, அமைதி போன்றவை இருந்தாலே, நம்மால் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்