How to Strengthen Bones in Tamil: உடல் வலிமையைப் பாதுகாப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் உடல் வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுவது எலும்புகள் ஆகும். எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள கால்சியம் உதவுகிறது. ஆனால், கால்சியம் ஒன்றினால் மட்டும் உடல் எலும்புகளை பலப்படுத்த முடியாது.
இவ்வாறு உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்க நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகளை மாற்றுவதன் மூலமும் பெறலாம்.
உடற்பயிற்சி
இளம் வயதில் நமக்குக் கிடைக்கும் ஒரு அற்புத சக்தி என்றே உடற்பயிற்சியைக் கூறலாம். இந்த இளமைப் பருவக்காலத்தில் நாம் செய்யும் உடற்பயிற்சியே நம் வாழ்நாள் முழுவதும் நம் உடலை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் காக்கிறது (Exercise for Bone Health).
அந்த வகையில், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எலும்புகளைப் பலப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக உடற்பயிற்சி என்றால் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்ளிங், நீச்சல் போன்ற பல்வேறு வகையான உடற்பயிற்சி நடவடிக்கைகள் உள்ளன. ஆனால், இவை உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகின்றன (How to Strength Bones Naturally in Tamil).
எலும்புகளை பலப்படுத்தும் உடற்பயிற்சி
இருந்தபோதிலும், எலும்புகளை பலப்படுத்தவும், தசைகளைப் பலப்படுத்தவும் பல்வேறு விதமான ஆரோக்கிய முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், Weight Training ஒரு சிறந்த பயிற்சியாக உள்ளது. இதற்கு ஜிம்-க்கு செல்வதும் ஒரு சிறந்த முறையாகும். இருந்தாலும், இதனை வீட்டிலும் செய்யலாம். இந்த Weight Training-ஐ அனைவரும் செய்யக் கூடாது. நல்ல உடல்நலம் உடைய அதாவது, இதயம் பலவீனமாக உள்ளவர்கள் மற்றும் இது போன்ற உடலில் பிரச்சனை உள்ளவர்கள் Weight Training -ஐ மேற்கொள்ள வேண்டாம். மாறாக, யோகா பயிற்சி செய்யலாம். இது உடலுக்கும், மனதுக்கும் மிகுந்த நன்மையைத் தரவல்லது (Best Exercise for Bone Strength).
சூரிய ஒளி
சூரிய ஒளி தாவரங்களுக்கு எப்படி முக்கியமானதோ, அது போலவே நம் உடலுக்கும் முக்கியமானதாகும். அவ்வாறு தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது, நம் உடல் சூரிய ஒளி படுவது போல பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். மேலும், முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு உடலின் மற்ற பாகங்களான, கை, கால், மற்றும் மற்ற பகுதிகளில் சூரிய ஒளி படுவது போல் நின்று, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.
உணவுப்பொருள்களின் வாயிலாக
உடற்பயிற்சி செய்வதோடு, இது போன்ற பல்வேறு உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலமும், உடல் எலும்புகள் வலிமையாக மாறும்.
உணவில் புரத வகைகளாக விளங்கும் பால், வெண்ணெய் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் கால்சியம் அதிகம் உள்ளது. அதன் படி, தினமும் டீ, காபி போன்றவற்ரை நிறுத்தி விட்டு வெறும் பாலை இரண்டு முறை குடித்து வருவதன் மூலம் எலும்பு பலமடையும். மேலும், தயிர், மோர் போன்றவையும் எலும்புக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கின்றன. இத்துடன் முட்டை எடுத்துக் கொள்வதன் மூலமும் எலும்பு பலமடையும்.
கீரை எடுத்துக் கொள்வது நல்லது. உணவில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றைத் தள்ளி வைப்பதைத் தவிர்த்து அவற்றை உண்பதன் மூலம் எலும்பு வலிமையுடன் இருப்பதை உணரலாம் (How to Strengthen Bones and Teeth).
எலும்பு உறுதிக்கு ஜிங்க் மற்றும் மெக்னீசியம் சத்துகளை உணவில் சேர்த்துக் கொள்வதும் அவசியமாகும். அதன் படி, மீன், இறால், நண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலர் இறைச்சிகளில் இருக்கும் எலும்பைக் கடித்தால் கூட நம்முடைய பற்கள் வலிமை பெறும் என்று கூறுவர் (How to Strength Bones in Old Age).
மேலும், இரவில் தூங்குவதற்கு சில மனிநேரம் முன்பாக சாப்பிட வேண்டும். முடிந்த அளவு 6 மணி அல்லது 7 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். ஏனெனில், நாம் உண்ணும் உணவு விரைவாக செரிமானம் அடைவதில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…