Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

குரலில் ஏற்படும் மாறுபடுகளை சரிசெய்வது எப்படி | How to cure voice disorders

Vaishnavi Subramani Updated:
குரலில் ஏற்படும் மாறுபடுகளை சரிசெய்வது எப்படி | How to cure voice disordersRepresentative Image.

நன்றாகப் பேசும் போது குரல் மாறுபாடுகள் இருந்தாலும் மற்றும் சிறுவயதிலிருந்து குரலில் பிரச்சனைகள் இருந்தாலும் கூட இந்த முறையில் சரி செய்யமுடியும். கை மற்றும் கால்களுக்கு எப்படி பிசியோதெரபி உள்ளதோ அது போல் குரல்வளை சரிசெய்வதற்கு ஸ்பீச் தெரபி உள்ளது. குரலில் பல பேருக்குப் பல வகையான பிரச்சனைகள் இருக்கும். அதை எப்படிச் சரிசெய்வது என  யோசிக்கிறீர்களா.இந்த பதிவில் குரலில் ஏற்படும் மாறுபாடுகளை எப்படிச் சரிசெய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
 

குரலில் ஏற்படும் மாறுபடுகளை சரிசெய்வது எப்படி | How to cure voice disordersRepresentative Image

குரலில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படிச் சரிசெய்வது

✤  இந்த மாதிரியான குரல் பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொள்வது தவறு. குரல் பிரச்சனை என்பது சளி பிரச்சனையில் ஆரம்பித்து அது புற்றுநோய் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது. அதனால் குரல் பிரச்சனை எளிதாக நினைக்காமல்  காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகவும்.

✤ தீடிரென குரலில் மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரம் வரை சரியாகாமலிருந்தாலும் இயல்பாகவே குரலில் மாற்றம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

✤ உடலில் உள்ள தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கு, பிசியோதெரபி என உண்டு. அது போல் குரலில் ஏற்பட்ட பிரச்சனைகளைக் குணப்படுத்துவதற்கு ஸ்பீச் தெரபி உள்ளது.

✤ தீடிரென குரலில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மருத்துவர் முதலில் எண்டோஸ்கோபி எடுத்து அதில் குரல் தசை வளர்ச்சி மற்றும் தழும்புகள் உள்ளதா என மருத்துவர் அந்த எண்டோஸ்கோபியில் பார்த்து அதை எப்படிச் சரிசெய்வது என ஆலோசனைகள் செய்வார்கள்.

குரலில் ஏற்படும் மாறுபடுகளை சரிசெய்வது எப்படி | How to cure voice disordersRepresentative Image

✤ அதில் தசை வளர்ச்சியாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அந்த தசையை நீக்கி பழைய குரல் ஆக மாற்றுவார்கள்.அத்துடன் சில நாட்கள் ஸ்பீச் தெரபி செய்தால் முழுவதுமாக குணமாகிவிடும்.

✤ சிலரது குரலில் இயல்பாகவே மாற்றம் தெரியும் மற்றும் சிலருக்குக் கீச்சுக்குரல், ஆணுக்குப் பெண் குரல் மற்றும் கரகரப்பான குரல் எனப் பல மாறுபட்ட குரல்கள் உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சைகள் தேவையில்லை.

✤ இவர்களுக்கு மூன்று முதல் ஐந்து மாதம் வரை தினமும் ஸ்பீச் தெரபி தந்தால் விரைவில் குணமாகும். அப்படிச் செய்தும் குரலில் மாற்றங்கள் வரவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.

✤ அவர் உங்களுக்கு எண்டோஸ்கோபி எடுத்து அதைப் பார்த்து உங்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என முடிவு செய்வார்கள். அது அறுவை சிகிச்சை செய்தும் கூட சரிசெய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்