Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

Egg Fruit Benefits in Tamil: என்னாது முட்டை பழமா…? இந்த பழத்த சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 14, 2022 & 10:45 [IST]
Egg Fruit Benefits in Tamil: என்னாது முட்டை பழமா…? இந்த பழத்த சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?Representative Image.

Egg Fruit Benefits in Tamil: முட்டை பழம் என்ற உடனே முட்டையில் இருந்து வருகிறாதோ? என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பழவகையாகும். இந்த பழம் ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது. இது பார்ப்பதற்கு மாம்பழத்தை போன்றும், சுவை சப்போட்டா பழத்தை போன்றும், வாசனை பூசணி காயை போன்றும் இருக்கும். மாம்பழத்தை போன்ற தோற்றம் கொண்ட இந்த பழத்தில் எண்ணற்ற நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. அதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

முட்டை பழம்:

பொதுவாக இந்த பழத்தை எக் ஃபுரூட் என்றும், கேனிஸ்டல் ஃபுரூட் என்றும் (Canistel Fruit) அழைப்பார்கள். இந்த பழம் முதன் முதலில் மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் தான் கண்டறிப்பட்டது. மேலும், இந்த பழத்தின் தோல் மாம்பழத்தை போன்றே மஞ்சள் நிறத்திலும் மெழுகு போன்று காணப்படும். அதன் சதைப் பகுதி வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவைப் போன்று மாவு தன்மையாக காணப்படும்.

சத்துக்கள் ஏராளம்:

இந்த பழம் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, பைரிடாக்சின், தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், பாந்தோத்தேனிக் அமிலம், போன்ற வைட்டமின்களால் நிறைந்தவை. மேலும் இரும்பு, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற தாதுச் சத்துக்களும் ஏராளம்.

நன்மைகள்:

❖ இந்த பழத்தில் காணப்படும் கரோட்டினாய்டு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

❖ உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் அவ்வளவு நன்மை.

❖ மாவு சத்து நிறைந்த இந்த பழம் மலசிக்கல், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை நீக்கி சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

❖ நீரிழிவு நோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், இந்த பழத்தில் நியாசினமைடு என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தி சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

❖ இந்த பழத்தில் காணப்படும் அதிகளவு இரும்பு சத்து மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்தை மேம்படுத்து, மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

❖ உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு அல்லது இரத்த சோகை இருப்பவர்களுக்கு இந்த முட்டைப் பழம் ஒரு வரப்பிரசாதம். ஆமங்க. இதில் இருக்கும் இரும்பு சத்து இரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. அதாவது, புதிய இரத்தத்தை ஊற வைக்கிறது.

எங்கு கிடைக்கும்?

இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த பழம் கண்டிப்பா வெளிநாடுகளில் தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. பச்சை பசேலென மரங்களும், கொடிகளும், சங்கீதம் பாடும் மலை அருவிகளும், குளு குளு வென மலையிலிருந்து வீசும் காற்றும் நிறைந்த நம்ம குற்றாலத்திலும், கேரளாவிலும் இந்த முட்டை பழம் அதிகமாகவே கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்