Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Symptoms of Low Hemoglobin in Tamil: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்குனு அர்த்தம்..!!

Nandhinipriya Ganeshan July 14, 2022 & 09:30 [IST]
Symptoms of Low Hemoglobin in Tamil: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்குனு அர்த்தம்..!!Representative Image.

Symptoms of Low Hemoglobin in Tamil: நமது உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதை ‘இரத்த சோகை’ அல்லது ‘அனீமியா’ என்று அழைப்பார்கள். அந்த வகையில், ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை உடலில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே மிகச் சரியாக சொல்லிவிடலாம். நமது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைய முதல் காரணமே ஆரோக்கியமற்ற உணவுமுறை தான். அதன்பின், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களும் அடங்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயற்கையாகவே அதிகரிக்கணுமா? இத சாப்பிடுங்க..

இந்த இரத்த சோகையானது நமது உடலில் ஏதோ பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்ற கொடிய நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே, உடலில் இரத்தம் குறைவாக உள்ளதா, இல்லையா என்பதை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில், உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், என்னென்ன அறிகுறிகள் உடலில் தென்படும் என்று பார்க்கலாம்.

இரத்த சோகை நோய்க்கான அறிகுறிகள்:

❖ உடலில் போதிய அளவு இரத்தம் இல்லாததால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்து திடீர் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

❖ உங்களுடைய தோல் வெளுத்து போய், சற்று வீக்கத்துடன் காணப்படும், இதற்கு உடலில் போதிய இரத்தம் இல்லை என்பதை குறிக்கும்.

❖ உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். இதை வைத்தும் இரத்த சோகை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

❖ அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால் இதயத்தில்மட்டும் பிரச்சனை என்று அர்த்தம் கிடையாது, உடலில் இரத்தம் குறைவாக இருக்கிறது என்பதையும் குறிக்கும்.

❖ இரத்தம் குறைவாக இருந்தால் சரியாக சுவாசிக்க முடியாது. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படும்.

இரத்த சோகை பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள் என்னென்ன..?

❖ பொதுவாக, நமது உடலில் இரத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்களை வைத்து கண்டுபிடித்து விடலாம். அதாவது, கண்களின் கீழ் இமையை கீழ்நோக்கி இழுக்கும் போது, அந்த பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல், வெளிர் அல்லது நிறமற்று காணப்பட்டால் அது இரத்த சோகை தான் என்று தெரிந்து கொள்ள முடியும்.

❖ உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போதே குமட்டல் அல்லது மயக்கம் ஏற்படும்.

❖ இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும்போது, மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் செல்லாமல் அடிக்கடி தலைவலியை உண்டாக்கும்.

❖ வெள்ளையான விரல்கள், அதாவது இரத்த சோகை இல்லையென்றால் உங்களுடைய விரல்களை அழுத்தும்போது இரத்தமானது விரல் முனைகளுக்கு வரும். அப்படி வராமல் வெள்ளையாகவே இருந்தால் அதுவும் இரத்த சோகையே.

❖ உங்களுடைய நகம் அடிக்கடி உடைந்துக் கொண்டே இருந்தால், இரத்த சோகை உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள்.

21 வயசுக்கு அப்பறம் உயரமா வளரனுமா..? அதுவும் ஒரே மாசத்துல… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..

Tags:

Symptoms of Low Hemoglobin in Tamil | How to Know if Your Hemoglobin is Low | How to know anemia from eyes | What are the signs of a low hemoglobin | How to know blood level is low | How to know blood level is low in tamil | Symptoms of low hemoglobin | Low hemoglobin symptoms in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்