Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறட்டை அதிகமா இருக்கா.? எப்படி கன்ட்ரோல் பண்ணலாம் | How to Control Kurattai Sound in Tamil

Gowthami Subramani Updated:
குறட்டை அதிகமா இருக்கா.? எப்படி கன்ட்ரோல் பண்ணலாம் | How to Control Kurattai Sound in TamilRepresentative Image.

நவீன உலகத்தில் நாம் தூங்கும் போது மட்டுமே நிம்மதி இருக்கும் சூழலே பெரும்பாலானோர்க்கு உள்ளது. அதிலும், தூங்கும் போது உங்களுடன் இருப்பவர்கள் குறட்டை சத்தம் அதிகமாக விட்டால், தூங்கவே முடியாது. குறட்டை தூங்கும் போது அவர்களில் உள்ள ஒரு சில மாற்றங்களினால் ஏற்படுகிறது. இதனைக் கலைக்கவே நாம் பல்வேறு முயற்சிகளை எடுக்க முற்படுவோம். குறட்டை வருவதை நிறுத்த வேண்டுமெனில், அவற்றிற்கான காரணங்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 

குறட்டை அதிகமா இருக்கா.? எப்படி கன்ட்ரோல் பண்ணலாம் | How to Control Kurattai Sound in TamilRepresentative Image

குறட்டை விடுதல்

தற்போதைய கால கட்டத்தில் குறட்டை விடுதல் ஒரு பெரும் குற்றமாகவே கருதப்படுகிறது. இது எல்லோருக்குமே பெரும் ஒரு தொந்தரவாகத் தான் கருதப்படும். மற்றவர்கள் குறட்டை விடும் போது, நம் காதில் பஞ்சுகளை அடைத்துக் கொள்வதும் இப்போது பயனில்லாமல் இருக்கிறது. அந்த அளவிற்கு குறட்டை விடுதல் காதைக் கிழிக்கும் அளவிற்கு இருந்து வருகிறது. குறட்டையால் பெரும் சோதனை ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது. முன்புஎல்லாம் வயதானவர்கள் மட்டுமே குறட்டை விடுவர் என்ற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது இளைஞர்கள், பெண்கள் என அனைவருமே குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.

குறட்டை அதிகமா இருக்கா.? எப்படி கன்ட்ரோல் பண்ணலாம் | How to Control Kurattai Sound in TamilRepresentative Image

குறட்டை வருவதற்கான காரணங்கள்

அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகவே குறட்டை கருதப்படுகிறது. இது உணவுப் பழக்க வழக்கங்கள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வருகிறது. மேலும், இந்த காரணிகளால் நாம் தூங்கும் போது உடல்கூறு ரீதியாக மூக்கு, தொண்டை வழியாக சுவாசிக்க முடியாமல் ஒரு வித சத்தத்தை ஏற்படுத்தும். இதுவே குறட்டை ஆகும். ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்கும் போது, அவை நமது சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி அவையே குறட்டைக்குக் காரணமாகின்றன. இவை மட்டுமல்லாமல், தூக்கமின்மை, மனஅழுத்தம், வயது, தூக்கமாத்திரை போன்றவையும் இதற்கு காரணங்களாக அமையும்.
 

குறட்டை அதிகமா இருக்கா.? எப்படி கன்ட்ரோல் பண்ணலாம் | How to Control Kurattai Sound in TamilRepresentative Image

உடல் எடை காரணமாகவும்

உடல் எடையும் குறட்டை விடுதலுடன் தொடர்பு உடையதாக அமைகிறது. உடல் எடையானது அதிகமாக இருக்கும் போது சுவாசப் பாதையில் பிரச்சனை ஏற்படுவதால் அது குறட்டை விடுதலுக்குக் காரணமாக அமைகிறது. ஏனெனில், அதிகமாக உடல் எடையுடன் காணப்படும் போது, நம் கழுத்துப் பகுதியில் அதிக கொழுப்புகள் தங்கிவிடும். இது சுவாசப் பாதையை அடைத்து விடுகிறது. இதன் காரணமாகவே குறட்டை ஏற்படுகிறது.

குறட்டை அதிகமா இருக்கா.? எப்படி கன்ட்ரோல் பண்ணலாம் | How to Control Kurattai Sound in TamilRepresentative Image

எப்படி தவிர்ப்பது

✤ குறட்டையைத் தவிர்க்க வேண்டுமெனில் நாம் ஒரு சில நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அந்த வகையில், நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில வழிமுறைகளை இதில் காண்போம்.

✤ உடல் எடையைக் குறைப்பது குறட்டையை மிதமாக சமப்படுத்தி விடும் எனக் கூறப்படுகிறது.

✤ தூங்கும் நிலையானது மல்லாக்கப் படுத்து தூங்குவது போல இருக்க கூடாது. இது மூச்சு விடுவதை சிரமப்படுத்தி, சுவாசப்பாதையை அடைத்து விடும். எனவே, ஒரு பக்கமாக திரும்பி பக்கவாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

✤ மது அருந்துதல், புகை பிடித்தல் இவை இரண்டையுமே அறவே தவிர்ப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை நீக்கி அதன் வீக்கத்தைக் குறைக்கலாம். இதனால், மது மற்றும் புகைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

✤ நாம் தூங்கும் போது மூச்சுவிடும் சுவாசக் காற்றின் தரத்தினைப் பொறுத்தும் குறட்டை வரும்.

✤ போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். பொதுவாக ஆண்களுக்கு சுமார் 3.7 லிட்டர் தண்ணீர் மற்றும் பெண்களுக்கு சுமார் 2.7 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

✤ நீராவி பிடிப்பதன் மூலமும், குறட்டையைத் தவிர்க்க முடியும். ஏனெனில் தொண்டையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் போது குறட்டை ஏற்படுகிறது. நீரை சூடேற்றி வாயைத் திறந்து நீராவி பிடிக்கும் போது தொண்டையில் உண்டாகும் ஈரப்பதம் குறட்டையைக் குறைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்