Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

பாரம்பரிய தின்பண்டங்கள்: கடலைமிட்டாய், எள்ளு உருண்டையின் மருத்துவகுணங்கள் தெரிஞ்சா ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க…!!

Nandhinipriya Ganeshan June 22, 2022 & 07:00 [IST]
பாரம்பரிய தின்பண்டங்கள்: கடலைமிட்டாய், எள்ளு உருண்டையின் மருத்துவகுணங்கள் தெரிஞ்சா ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க…!!Representative Image.

இந்த காலத்தில் என்னதான் விதவிதமான தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டாலும், பாரம்பரிய தின்பண்டங்களின் ருசிக்கு ஈடாகாது. நமது பாரம்பரிய தின்பண்டங்களில் அனைவராலும் மிகவும் ருசித்து சாப்பிடக்கூடிய தின்பண்டங்களில் ஒன்றுதான் கடலைமிட்டாயும், எள்ளு உருண்டையும். நாம் சிறுவயதில் இருக்கும் போது பள்ளி வாசலில் இம்மாதிரியான தின்பண்டங்கள் தான் அதிகமாக விற்கப்படும். ஆனால், இந்த கலியுக காலத்தில் பார்க்க முடிகிறதா? 

அக்காலத்தில் நம் முன்னோர்கள் இம்மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்ததால் தான் 60 வயதிலும் இரும்பு போல் இருக்கிறார்கள். ஆனால், நாம் 20 வயதிலேயே பல வகையான நோய்த்தொற்றுகளால் எளிதில் பாதிப்படைகிறோம். இதற்கெல்லாம் என்ன காரணம் உணவு பழக்கங்களே. என்ன தான் பல விதமான உணவுகளை சாப்பிட்டாலும், இந்த நொறுக்கு தீனியிலாவது பாரம்பரியமான சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்போது, அனைவருக்கும் பிடித்த எள்ளு உருண்டை, கடலைமிட்டாயின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

கடலைமிட்டாய் - எள்ளு உருண்டை:

இந்த மாதிரியான தின்பண்டங்களை எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும், அந்த அளவிற்கு இதன் சுவை நமது நாக்கில் எச்சில் ஊற வைக்கும். அதிலும் இதை வீடுகளில் அம்மாவோ அல்லது பாட்டியோ செய்யும்போது இதன் வாசனை ஊரையே கூட்டிவிடும். ஆஹா... என்ன ஒரு வாசனை... வாசனையை நுகரும்போதே நாவில் எச்சில் ஊறும். ஆனால், இந்த தலைமுறை இதை எல்லாம் அனுபவித்திருப்பார்களா? என்றால் கேள்வி குறியாக தான் இருக்கிறது. ஆனால், இதன் பயன்களை தெரிந்துக் கொண்டால் எக்காரணத்திற்காகவும் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள். முடிந்த வரை குழந்தைகளுக்கு இம்மாதிரியான தின்பண்டங்களை வாங்கிக் கொடுங்கள். அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

எள்ளு உருண்டையின் மருத்துவ குணங்கள்:

மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகளை சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள்ளு உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். 

எள்ளில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் காணப்படுகிறது. அதனால், படபடப்பு தன்மை அதிகம் இருப்பவர்கள் தினமும் ஒரு எள்ளு உருண்டையை சாப்பிட்டு வந்தால் படபடப்பு (Ellu urundai benefits in tamil) தன்மை மறையும். 

எள்ளில் இருக்கும் இரும்பு சத்து, துத்தநாக சத்து ஆகியவற்றால் உடலில் இரத்தம் அதிகம் உற்பத்தியாகும். உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு எள்ளு உருண்டை எடுத்துக்கொள்ளலாம். 

எள்ளு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் விரைவில் குணமாகும். மேலும், ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கும். 

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் சற்று தாமதமாக வரும் அப்படிப்பட்டவர்கள் தினமும் ஒரு எள்ளு உருண்டை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீக்கிரம் வருவதோடு, சீராக வருவதற்கும் உதவும். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் வலிகளுக்கு சிறந்த மருந்து. 

மது, சிகரெட் போன்ற போதை பழக்கத்தை விட்டொழிக்க நினைப்பவர்கள் தினங்தோறும் ஒரு எள்ளு உருண்டையை சாப்பிட உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி, உடல் தூய்மையடையும். 

எள்ளு அதிக கலோரி கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்தது. ஆதலால், உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரு பிரிவினரும் நாள் ஒன்றுக்கு 50 கிராம் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எள்ளு உருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வை தடுக்க முடியும். 

ஒல்லியாக இருப்பவர்கள் எள்ளு சாப்பிட்டால் குண்டாகலாம். அதுமட்டுமல்லாமல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமலும் நம்மை பாதுகாக்கிறது. 

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் எள்ளை பித்த உடல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது.

கடலைமிட்டாயின் மருத்துவ குணங்கள்:

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கடலைமிட்டாய் தினமும் சாப்பிடலாம்.

நாள்தோறும் 50 கிராம் அளவிற்கு கடலை மிட்டாய் சாப்பிடு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது, மேலும் இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், மன அழுத்தத்தைப் போக்குவதில் முதன்மை வாய்ந்தது.

இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக், மேலும் அவர்களின் ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும்.

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இளமையை (kadalai mittai benefits in tamil) பாதுகாக்கிறது. 

நாம் கடலைமிட்டாயை பற்றி நினைத்துக் கொண்டு இருக்கும் ஒரு தவறான விஷயம் இதை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்துவிடும் என்று. ஆனால், உண்மையில் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகமாக்குகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்