Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weight Loss Yoga in Tamil: எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு யோகா போதும்...!!

Nandhinipriya Ganeshan June 21, 2022 & 21:00 [IST]
Weight Loss Yoga in Tamil: எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு யோகா போதும்...!!Representative Image.

Weight Loss Yoga in Tamil: உடல் எடையை உடற்பயிற்சி செய்து தான் குறைக்க வேண்டும் என்பதில்லை. யோகா மூலமும் குறைக்கலாம். யோகா செய்வதன் மூலம் உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். சுவாசம் மிக எளிதாக இருக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைப்புகென்றே பல யோகாசனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை தான் பார்க்கப்போகிறோம். 

சூரிய நமஸ்காரம்:

உடல் எடையை குறைப்பதற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சூரிய நமஸ்காரம். யோகாவிலும் மிகவும் முக்கியமான ஆசனம் சூரிய நமஸ்காரம். ஏனென்றால் சூரிய நமஸ்காரத்தில் வரும் 12 படிகள் செய்தாலே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆசனத்தை செய்யும்போது நமது உடலில் அனைத்துப்பகுதிகளும் உறுப்புகளும் வலுப்பெறும். எடை குறைப்போடு பொதுவான பலனைப் பெற வேண்டுமென்றால் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். 

மன அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனங்கள்...!!

வீரபத்ராசனம் (Virabhadrasana benefits in tamil) 

அடுத்தப்படியாக உடல் எடையை குறைப்பதற்காகவே இந்த வீரபத்ராசனம் (Warrior Pose) செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதை செய்யும் போது வாயை திறந்து மூச்சை நன்கு உள்ளிழுத்து, பின்பு மீண்டும் வாயை திறந்து காற்றை வெளியேற்ற வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் கொழுப்பு எரிக்கப்பட்டு கண்டிப்பாக உடல் எடை (weight loss yoga poses) குறையும். 

முதல் முறையாக யோகா செய்பவர்களுக்கான ஆரம்ப நிலை யோகா பயிற்சிகள்..

செய்முறை (How to do Virabhadrasana)

முதலில் கைகளை பக்கவாட்டில் வைத்து நேராக நிற்கவும். பின்னர் இடது காலை முன் நோக்கி சற்று பெரிய அடியாக வைக்க வேண்டும். வலது கால் பின்னார் இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா அப்ப இந்த யோகா தான் செய்யனும்..!! யோகாசனத்தின் வகைகள் & பயன்கள்..

இப்போது வலது கால் பாதத்தை 45 டிகிரி கோணத்தில் திருப்ப வேண்டும். மூச்சை மெதுவாக இழுத்தப்படி, இடது கால் முட்டியை முன்னோக்கி மடக்கியவாறு இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பிய நிலையில் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.

இதை செய்யும் போது இடது கால் முழங்கால் மற்றும் கணுக்கால் ஒரே நேர் கோட்டில் இருப்பது அவசியம். 

முதுகை முடிந்த வரை நன்றாக வளைத்து, தாடையை உயர்த்தி. தலையை மேல் நோக்கி கூப்பிய கைகளை பார்க்க வேண்டும்.

இடுப்பை மெதுவாக முன்னோக்கி இறக்க வேண்டும். 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி, அடுத்ததாக வலது காலை முன்வைத்து ஆசனத்தை தொடரலாம். 

குறிப்பு: இருதய கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தை தவிர்க்கவும். 

Yoga vs Gym - Which is Better: யோகா, ஜிம் - ரெண்டுல எது பெஸ்ட்..?? 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்