Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Vinayaka Chaturthi 2023 Naivedyam in Tamil: விநாயகர் சதுர்த்தி 2023 நைவேத்தியம் செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan September 06, 2023 & 11:30 [IST]
Vinayaka Chaturthi 2023 Naivedyam in Tamil: விநாயகர் சதுர்த்தி 2023 நைவேத்தியம் செய்வது எப்படி?Representative Image.

Vinayagar Naivedyam 2023 in Tamil: பிள்ளையார் பிறந்தநாளை தான் விநாயகர் சதுர்த்தி என்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 (புதன்கிழமை) வருகிறது. இதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நாளில் விதவிதமான பிள்ளையார் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து, அதற்கு நைவேத்தியமாக பிள்ளையாருக்கு பிடித்த சில இனிப்பு பலகாரங்களை செய்து படைத்து வழிபாடு செய்வார்கள். நைவேத்தியமாக படைக்கும் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை மோதகம் அல்லது வெல்ல பூரண கொழுக்கட்டை என்றும் அழைப்பார்கள். இப்போது வீட்டிலேயே மிகவும் சுலமபாக கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்ன தேவை?

மேல் மாவு செய்ய:

அரிசி மாவு - 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

தண்ணீர் - தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

குறிப்பு: அரிசி மாவு கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே பச்சரிசியை ஊறவைத்து, துணியில் காயவைத்து, மிக்ஸியில் அரைத்து, சலித்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

தேங்காய் பூரணம் செய்ய:

வெல்லம் - 4 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 1 கப்

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

எப்படி செய்வது?

முதலில் தேவையான அளவு தண்ணீரை எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஒரு கரண்டி கொண்டு பிசையவும். 

தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் மாவு வேகாமல் போய்விடும்.

பிறகு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையை பயன்படுத்தி பிசைந்து சின்ன சின்ன சமமான அளவு உருண்டைகளாக உருட்டி மூடி வைக்கவும்.

இப்போது, கடாயில் தேங்காய் துருவல் மற்றும் வெல்லத்தை ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும். வெல்லம் தேங்காயுடன் கலந்து இறுகும் வரை கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.

கைகளில் கொஞ்சமாக எண்ணெய் தடவி, உருட்டிய மாவு உருண்டையை மெல்லியதாக தட்டி, அதன் நடுவில் தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து அழகாக மோதகம் வடிவில் ஷேப் செய்யவும்.

இதை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரெடி பண்ண மோதங்களை ஆவில் வேக வைத்து எடுத்தால், சுவையான மோதகம் ரெடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்