Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Kerala Paal Payasam | கேரளா ஸ்டைல் பால் பாயாசம் எப்படி செய்வது?

Priyanka Hochumin Updated:
How to Make Kerala Paal Payasam |  கேரளா ஸ்டைல் பால் பாயாசம் எப்படி செய்வது?Representative Image.

தென்னிந்தியாவில் மிகவும் பேமஸ் ஆன இனிப்புகளில் ஒன்று பால் பாயாசம் . இந்த பால் பாயசத்தை கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது சில பொருட்களை சேர்த்து சமைப்பார்கள். எனவே, அதனை கேரளா பால் பாயாசம் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் அந்த பாயாசம் எப்படி செய்வது என்று பாப்போம். நீங்கள் இந்த புத்தாண்டில் வீட்டில் இந்த இனிப்பு சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

How to Make Kerala Paal Payasam |  கேரளா ஸ்டைல் பால் பாயாசம் எப்படி செய்வது?Representative Image

How to make Kerala Paal Payasam in Tamil:

மிகவும் சுவையான தித்திக்கும் கேரளா பால் பாயாசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

தயாரிப்பு நேரம் - 5 நிமிடம் || சமைக்கும் நேரம் - 50 நிமிடங்கள் || 4-5 பேருக்கு பரிமாறலாம்.

கேரளா உனக்கலரி அரிசி | பச்சை அரிசி | பாசுமதி அரிசி - 1/4 கப்

சர்க்கரை - 1/2 கப் + 2 ஸ்பூன் 

பால் - 5 கப்

How to Make Kerala Paal Payasam |  கேரளா ஸ்டைல் பால் பாயாசம் எப்படி செய்வது?Representative Image

செய்முறை

நீங்கள் எந்த அரிசியை பயன்படுத்துகிறீர்களோ அத்துடன் பாலை சேர்த்து குக்கரில் வைக்கவும்.

நான்கு விசில் வந்த வுடன், அதனை பெரிய பாத்திரத்தில் மாற்றி மூடி வைக்கவும்.

பின்னர் பாரம்பரிய உருளி கொண்டு தான் செய்ய வேண்டும். ஆனால் அது இல்லாத பட்சத்தில் ஒரு தடியான பாத்திரத்தில் பால் மற்றும் அரிசியை மாற்றி அடுப்பை கம்மி சூட்டில் கிளறவும்.

பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.

பாயாசம் பிங்க் நிறத்தில் மாறிய உடனே பாத்திரத்தை இறக்கி பரிமாறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்