Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

What is a Black Diamond Apple in Tamil: கருப்பு வைர ஆப்பிள் சாப்பிட்டு இருக்கிங்களா? விலை எவ்வளோ தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 12:30 [IST]
What is a Black Diamond Apple in Tamil: கருப்பு வைர ஆப்பிள் சாப்பிட்டு இருக்கிங்களா? விலை எவ்வளோ தெரியுமா?Representative Image.

What is a Black Diamond Apple in Tamil: நாம் பொதுவாக சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் தான் ஆப்பிளை பார்த்திருக்கிறோம். அதிலும் சிவப்பு நிற ஆப்பிள் தான் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஆப்பிள் பழத்திலேயே இன்னொரு நிறத்தில் ஆப்பிள் வளர்க்கப்படுகிறது. அதுவும் கருப்பு நிறத்தில். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம். இந்த ஆப்பிளை செல்லமாக “பிளாக் டைமண்ட் ஆப்பிள்” என்று அழைப்பதுண்டு. இது மிகவும் அரிதான ஒரு ஆப்பிள் வகையாகும். இந்த அரிய வகை ஆப்பிள் திபெத்தியன் பீடபூமியில் உள்ள நியிஞ்சி என்ற கிராமத்தில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. சில நேரங்களில் இதை திபெத்தியன் ஆப்பிள் என்றும் சொல்வார்கள்.

8 வருசமா?

மேலும், மற்ற ஆப்பிள் மரங்களை போல இந்த ஆப்பிள் மரங்களை வளர்க்க முடியாது. ஏனென்றால், இந்த ஆப்பிள் கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் தான் விளையுமாம். இதிலும் மற்றொரு ஆச்சர்ய மூட்டும் விஷயம் என்னவென்றால், மற்ற ஆப்பிள் மரங்கள் வளர்ந்து 2-3 வருடத்திலேயே பழங்களை கொடுத்துவிடும். ஆனால், கருப்பு ஆப்பிள் மரம் வளர்ந்து பழம் விடுவதற்கே 8 வருடங்கள் ஆகுமாம். இந்த ஆப்பிளின் உண்மையான நிறம் அடர் ஊதா, ஆனால் நமக்கு பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனாலையே கருப்பு ஆப்பிள் என்று அழைக்கிறார்கள்.

கருப்பு நிறத்துக்கு காரணம்:

கருப்பு வைர ஆப்பிளின் நிறத்திற்கு காரணம் நியிஞ்சியில் காணப்படும் புவியியல் மாற்றமே. அதாவது அந்த பகுதியில் பகல் நேரத்தில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்கள் அதிகளவில் காணப்படும். அதே இரவு நேரத்தில் முழுவதுமாக குறைந்தும் காணப்படுகிறது. இந்த திடீர் பருவநிலை மாற்றமே இந்த ஆப்பிள் தனித்துவமான கருப்பு நிறத்தை பெற காரணம்.

பிளாக் டைமண்ட்டின் சுவை:

இதன் மேல் தோல் மட்டுமே கருப்பு நிறத்தில் காணப்படும். ஆனால், சதைப்பகுதி நாம் எப்பவும் சாப்பிடும் ஆப்பிளை போல வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். இதன் சுவை எப்படி இருக்குமென்றால், சுருக்கமாக சொன்னால் தேனை விடவும் மிகவும் இனிப்பாக இருக்குமாம். மேலும், கருப்பு ஆப்பிள் அக்டோபர் மாதம் அறுவடை செய்யப்படுகிறது. சுமார் அறுவடை செய்யப்பட்ட மாதத்திலிருந்து இரண்டு மாதங்கள் வரை சந்தையில் கிடைக்கும், அதுவும் சைனாவில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விலையும் கொஞ்சம் ஜாஸ்த்தி:

இவ்வளவு சவால்களை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது என்றால், இதன் விலையும் அதிகமாக தானே இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அதே தாங்க.. இதன் விலையும் ரொம்பவே ஜாஸ்தி தாங்க. ஒரு கருப்பு ஆப்பிளின் விலை 50 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 500.

பயன்கள் என்னென்ன?

பிளாக் டைமண்ட் ஆப்பிள் மற்ற ஆப்பிள்களைப் போலவே ஆரோக்கியமானது. கருப்பு ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இருதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், அவற்றில் கரையாத நார்ச்சத்து செரிமானத்திற்கு ரொம்பவே உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் ஏ, அத்துடன் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து என அனைத்து சத்துக்களும் சற்று கூடுதலாகவே உள்ளது.

Tags:

Black diamond apple price in india | Black diamond apple price | Black diamond apple Tibet | Black diamond apple benefits | Black diamond apple facts | What is a black diamond apple in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்