Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

How to Use Menstrual Cup in Tamil: மென்சுரல் (அ) மாதவிடாய் கப் பயன்படுத்துவது எப்படி?

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 15:50 [IST]
How to Use Menstrual Cup in Tamil: மென்சுரல் (அ) மாதவிடாய் கப் பயன்படுத்துவது எப்படி?Representative Image.

How to Use Menstrual Cup in Tamil: ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தவிர்க்க முடியாத தருணம் மாதவிடாய் காலங்கள். அந்த நாட்களில் நாப்கின், டேம்பன்ஸ், மாதவிடாய் கப் எனப் பலவற்றை தேர்வு செய்து பயன்படுத்துகிறார்கள். அவற்றில், பெரும்பாலும் நாப்கின்களே பலராலும் விரும்பப்படுகின்றன. ஏனென்றால், பயன்படுத்துவதும் எளிதானது எந்த பயமும் இல்லை. இது ஒரு காரணமாக இருந்தாலும், மற்றவைகளின் பயன்பாடு குறித்துப் பெண்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் மற்றொரு காரணம். அதுமட்டுமல்லாமல், இவற்றை பயன்படுத்துவதில் பல பெண்களுக்கும் பயம் ஏற்படுகிறது, இதனாலையே பெண்கள் நாப்கினை நாட முக்கிய காரணமாக இருக்கிறது. பென்சுரல் கப் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்குனு அர்த்தம்

பென்சுரல் கப்

நாப்கின்கள் உடலின் ஆரோக்கியத்தை குறைக்கிறது என்பதால் தற்போது பல நாடுகளில் அதற்கு மாற்றாக மென்சுரல் கப், டேம்பன்ஸ் பயன்பாடுதான் புழக்கத்தில் அதிகமாக இருக்கின்றன. ஆமாங்க. இந்த மாதவிடாய் கப் பெண்களுக்கு மாதவிடாய் காலப் பயன்பாட்டுக் கிடைத்திருக்க கூடிய மிகப் பெரிய வரம் என்றே சொல்லலாம். நம் நாட்டிலும் இது கிடைத்தாலும், இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த மாதவிடாய் கப் சிலிகானால் செய்யப்பட்டாலும், அலர்ஜியிய ஏற்படுத்தாத வகையிலேயே தயாரிக்கப்படுகிறது. எனவே, எந்த பயமும் தேவையில்லை. அதேப்போல், கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சமும் வேண்டாம்.

கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எதற்கு செய்யப்படுகிறது? அதன் விலை எவ்வளவு? எத்தன முறை ஸ்கேன் எடுக்கணும்?

அளவு தேர்ந்தெடுப்பது எப்படி?

பெண்களின் உடலமைப்பிற்கு ஏற்ப பிரத்யேகமான வடிவங்களில் இவை கிடைக்கின்றன. இதை இளம்பெண்களும் பயன்படுத்தலாம். குழந்தை பெற்ற பெண்கள், இளம் பெண்கள், அதிக உடல் எடை கொண்டிருக்கும் பெண்கள் என்று அவரவர் அளவுக்கேற்ப S-Small, M-Medium, L-Large என்று கிடைக்கிறது. இதன் விலை ரூ.300 லிருந்தே கிடைக்கிறது.

கர்ப்ப பரிசோதனை கிட் பயன்படுத்துவது எப்படி?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஆரம்பத்தில் பயன்படுத்தும் போது சற்று சிரமம் இருக்கும். அப்புறம் போக போக அதை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். வளையும் தன்மை கொண்ட மென்சுரல் கப்பை சி போன்ற அமைப்பில் மடித்து ஃபோல்டு செய்தால் அது எஸ் வடிவில் மாறும். பின் காலை விரித்து உட்கார்ந்து உறுப்பின் வழியே இந்த கப்பின் மேல்புறம் உள்நோக்கி இருக்குமாறு செருகி வைக்க வேண்டும்.

அதன்பின் அதனை மெதுவாக சுழற்றினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும். பிறகு, உதிரம் இந்த கப்பில் சேகரிக்க தொடங்கும். சரியாக பொருத்தாமல் இருந்தால் உதிரம் லீக் ஆகவும் வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுங்கள். உங்களுக்கான அளவை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இளம்பெண்கள்.

எப்படி பல் தேய்ச்சாலும் மஞ்சளாவே இருக்கா? ஒரே நாளுல முத்து போன்ற பற்களுக்கு இத பண்ணுங்க..

எவ்வளவு நேரம் வைத்திருக்கலாம்?

நாப்கின் பயன்படுத்தும் போது குறைந்து 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். அப்படி இல்லையென்றால், பெண் உறுப்பில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால், எல்லா நேரங்களிலும் நாப்கின்களை நேரத்திற்கு நேரம் மாற்ற முடியாது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள். ஆனால், மென்சுரல் கப் பயன்படுத்தும்போது அந்த கவலை இல்லை. இதை குறைந்தது 8-9 மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், மலம், சிறுநீர் கழிக்கும்போதும் இதை அகற்ற தேவையில்லை.

இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஃபேசியல் செய்யலாம்.. ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள்..

சுத்தம் செய்வது எப்படி?

ஒவ்வொரு 8-9 மணி நேரத்திற்கு பிறகும் மென்சுரல் கப்பில் காம்பு போன்ற பகுதியை வெளியே எடுத்தால் கப் காயமின்றி வெளியே வந்துவிடும். அதில் இருக்கும் உதிரத்தை கழிப்பறையில் கொட்டிவிட்டு சுத்தமான வெந்நீரில் கழுவி மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை உள்ளே வைக்கும்போதும், வெளியே எடுக்கும்போது கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

எனவே, உங்களுக்கு எத்தனை நாட்கள் உதிரப்போக்கு இருக்குமோ அத்தனை நாட்கள் பயன்படுத்தி விட்டு, பின்னர் வெந்நீரில் சோப்பு நீர் கலந்து கழுவிவிட்டு காய வைத்து அதற்குரிய பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். அவ்வளவு தாங்க. இந்த கப்பை 3 லிருந்து 10 வருடங்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம். இதை பயன்படுத்தினால் வேகமாக நடக்கவோ, அசைக்கவோ செய்ய முடியாதோ என்ற கவலையே வேண்டாம். எப்பவும் போல இருக்கலாம். இதை பயன்படுத்தினால் உங்களுக்கே புரியும்.

Tags:

How to use menstrual cup demo in tamil | How to use menstrual cup in tamil | Menstrual cup how to use in tamil | How to use menstrual cup for beginners | How to remove a menstrual cup | How to use menstrual cup for the first time | How far to insert menstrual cup | How to insert a menstrual cup for beginners | Menstrual cup how to use with pictures


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்