Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்.! வீட்டிலேயே உலர் திராட்சையை எப்படி முறையாக செய்வது.? | How to Make Ular Thiratchai

Gowthami Subramani Updated:
இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்.! வீட்டிலேயே உலர் திராட்சையை எப்படி முறையாக செய்வது.? | How to Make Ular ThiratchaiRepresentative Image.

பொதுவாக பாயாசம், பொங்கல் போன்றவற்றில் உலர் திராட்சை போடுவது வழக்கம். இவ்வாறு சேர்க்கப்படும் உலர் திராட்சையில் நிறைய சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும், இந்த திராட்சையானது ரத்த சோகையைக் குணப்படுத்தக் கூடிய அற்புதமான ஆற்றல் கொண்டுள்ளது.

பெரும்பாலும், விதையற்ற திராட்சைப்பழமானது விதையுள்ள திராட்சைப் பழத்தை விட அதிக அளவு சக்தியுள்ளதாக அமையும். இந்த திராட்சை பழங்களில் இருந்தே உலர் திராட்சை தயார் செய்யப்படுகிறது. இது கடைகளில் அதிக அளவிலான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த உலர் திராட்சையை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம். வீட்டிலேயே இயற்கையான முறையில் உலர் திராட்சை செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.
 


 

இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்.! வீட்டிலேயே உலர் திராட்சையை எப்படி முறையாக செய்வது.? | How to Make Ular ThiratchaiRepresentative Image

உலர் திராட்சை

பொதுவாக உலர் திராட்சையைத் தயார் செய்வதற்கு நமக்கு விருப்பமான திராட்சை வகையைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். விதையுள்ள திராட்சை பொதுவாக அதிக பலன்களை அளித்தாலும், உலர் திராட்சைக்கு விதையற்ற திராட்சை பழங்களையே வாங்கிக் கொள்ள வேண்டும். விதைகளுடன் திராட்சை சாப்பிடுவது என்பது நன்றாக இருக்காது.
 

இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்.! வீட்டிலேயே உலர் திராட்சையை எப்படி முறையாக செய்வது.? | How to Make Ular ThiratchaiRepresentative Image

உலர் திராட்சை செய்வது எப்படி

முதலில் விருப்பமான திராட்சை வகைகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.

விதைகள் இல்லாத திராட்சைகள் இருக்கும் காம்புகளை எல்லாம் நீக்கி விட வேண்டும்.

பிறகு, இதனை ஓரிரு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ள வேண்டும்.

பின், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். இதன் மூலம், ரசாயன பூச்சிக் கொல்லிகளால் வளர்க்கப்பட்ட திராட்சையில் இருக்கக்கூடிய பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் ரசாயன மூலக்கூறுகள் போன்றவை நீங்கி விடும்.

இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்.! வீட்டிலேயே உலர் திராட்சையை எப்படி முறையாக செய்வது.? | How to Make Ular ThiratchaiRepresentative Image

பிறகு, தண்ணீரால் வடிகட்டி அதனை உலர்வாக எடுத்து வைக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, இட்லி பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் திராட்சை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை நன்கு அவித்து எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவித்த திராட்சைப் பழத்தின் நிறம் மாறி இருக்கும்.

இதனை எடுத்து வெயிலில் ஒரு வாரம் வரை நன்கு உலர வைக்க வேண்டும்.

இதனை நிழலில் வைக்காமல், வெயிலில் ஒரு வாரம் வரை கூட நன்கு உலர வைத்துக் கொள்ளலாம்.

வருடக் கணக்கில் திராட்சை கெடாமல் இருக்க வெயிலில் உலர வைப்பது நல்லது. நிழலில் வைக்கக் கூடாது

இனி காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம்.! வீட்டிலேயே உலர் திராட்சையை எப்படி முறையாக செய்வது.? | How to Make Ular ThiratchaiRepresentative Image

அதன் படி, திராட்சையினை சுத்தமான துணியை விரித்து அதில் திராட்சைப் பழம் ஒவ்வொன்றையும் தனித்தனியே வைத்து காய வைக்கலாம்.

அதன் பின், மறுநாள் அந்த திராட்சை திருப்பி போட்டு காய வைக்க வேண்டும்.

இவ்வாறு 5 முதல் 7 நாள்கள் வரை உலர வைப்பதன் மூலம் அருமையான சுவையுடன் கூடிய உலர் திராட்சை தயாராகி விடும்.

வீட்டிலேயே, ஆரோக்கியமான மற்றும் எளிமையான முறையில் உலர் திராட்சைகளைத் தயார் செய்து காற்று உட்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தினந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்