Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பத்தின் முதல் 3 மாத கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | First Three Months Baby Development Tamil

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 09:15 [IST]
கர்ப்பத்தின் முதல் 3 மாத கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | First Three Months Baby Development TamilRepresentative Image.

கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்களின் அதிகபட்ச ஆசையே குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் என்பது தான். இந்த அற்புதமான பயணத்தின் தொடக்கத்தில் வாரங்கள் மற்றும் மாதங்களில் எம்மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது பற்றி நிறைய கேள்விகள் மனதில் தோன்றும். அந்த வகையில் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி (First Trimester Fetal Development) எப்படி இருக்கும் என்று விரிவாக பார்க்கலாம். 

முதல் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சி:

கர்ப்பத்தின் முதல் மூன்று காலங்களில், செல்கள் ஒரு சிறிய முட்டையாக தொடங்கி, பின்னர் ஒரு பெரிய பிளம் அளவுள்ள கருவாக மாறும். இதற்கிடையில் வாரங்களை அடிப்படையாக கொண்டு உங்கள் குழந்தையின் முதுகுதண்டு வடம், மூளை, இருதயம், கை விரல்கள், கால்விரல்கள் மற்றும் சில சிறிய உறுப்புகள் உருவாகும். அதேபோல், தாய்க்கும் சேய்க்கும் உயிர் நாடியாக இருக்கும் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள் கொடியும் இந்த முதல் மூன்று மாதங்களில் தான் வளரத் தொடங்கும். 

பின்னர் மூன்றாவது மாதத்தின் முடிவில், ஒரு மனிதனுக்கு தேவையான உறுப்புகளும், உடல்பாகங்களும் சின்னதாக இருந்தாலும் கூட, அதது அந்தந்த இடத்தில் இருக்கும். முதல் மூன்று மாதங்களில் நிகழும் இந்த அற்புதங்களை வாரங்கள் அடிப்படையில் விரிவாக (first three months of pregnancy baby growth) பார்க்கலாம்.

4 வாரங்களில் நிகழும் அற்புதம்

பிளாஸ்டோசிஸ்ட் எனப்படும் உயிரணுக்கள் பிரிந்து கருப்பையில் பொருத்தப்படும். இதனால் தான் சில தாய்மார்களுக்கு இரத்தபோக்கு (implantation bleeding) ஏற்பட காரணம். உள் செல்கள் கருவாகவும், வெளிப்புற செல்கள் நஞ்சுக்கொடியாகவும் மாறும். நஞ்சுக்கொடி உங்கள் குழந்தைக்கு இப்போதிலிருந்து பிரசவம் வரை ஊட்டச்சத்தை வழங்க ஆரம்பிக்கும். 
6 வாரங்களில் நிகழும் அற்புதம்

ஆறு மற்றும் ஏழு வாரங்களில், இதயம், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் உருவாகத் தொடங்குகின்றன, மேலும் தலை மற்றும் கைகால்களும் வடிவம் பெறுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு செல்களின் பந்தாக இருந்தது, இப்போது அடையாளம் காணக்கூடிய அளவிற்கு சி-வடிவமாக வளர்ச்சியடைந்திருக்கும்.
9 வாரங்களில் நிகழும் அற்புதம்

ஏறக்குறைய 9 வாரங்களில் இருந்து, உங்கள் குழந்தை, இப்போது கரு என்று அறியப்படுகிறது, குழந்தையின் பாகங்கள் அசைய ஆரம்பிக்கலாம். இருப்பினும், இரண்டாவது மூன்று மாதங்கள் வரை எந்த அசைவையும் உங்களால் உணர முடியாது.

10 வாரங்களில் நிகழும் அற்புதம்

இந்த வாரம் உங்கள் குழந்தையின் விரல்கள் மற்றும் கால்விரல்கள் வளரத் தொடங்கும். சுமார் 10 அல்லது 11 வாரங்களில் இருந்து, உங்கள் குழந்தையின் இதயம் டாப்ளர் அல்ட்ராசவுண்ட் மூலம் கேட்கும் அளவுக்கு சத்தமாக துடிக்க ஆரம்பிக்கும். இதை தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு காட்டுவார்.

3 மாதத்தில் குழந்தையின் அளவு:

மூன்றாவது மாதத்தின் முடிவில், உங்கள் குழந்தை சுமார் 7.6 -10 செமீ (3-4 அங்குலம்) நீளமும், 28 கிராம் (1 அவுன்ஸ்) எடையும் (3 months pregnant baby size in tamil) இருக்கும். உங்கள் குழந்தையின் மிக முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு கணிசமாகக் குறைகிறது.

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்