Sun ,Jul 14, 2024

சென்செக்ஸ் 80,519.34
622.00sensex(0.78%)
நிஃப்டி24,502.15
186.20sensex(0.77%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image.

Second Trimester of Pregnancy Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கிறது. இதனால், உங்களுக்கு பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட், ஊறுகாய் போன்றவற்றை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், உங்க குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துநிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கர்ப்பத்தின் 5வது மாதத்தில் நீங்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

தினமும் பால் அவசியம்:

எல்லா நேரங்களிலும் நீரேற்றமாக இருப்பது அவசியம். ஏனென்றால், இப்போது நீங்க இரண்டு பேரை கவனித்துக் கொள்கிறீர்கள். கர்ப்பத்தின் போது மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடாது என்றால், நிறைய தண்ணீர் குடிங்கள். தண்ணீருடன் ஒவ்வொரு நாளும் குறைந்த 2-3 கிளாஸ் பால் குடிப்பதால், உங்க குழந்தையின் ஆரோக்கியமான எலும்பு, பல் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை பெற முடியும். அதோடு, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

கீரை:

அதிகளவு பச்சைகாய்கறிகள் சாப்பிடுவது உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும், உங்க வயிற்றில் வளரும் குழந்தைக்காக நீங்க அதை அதிகம் சேர்த்துக்கொள்ள தான் வேண்டும். அதன்படி, கீரை, ப்ராக்கோலி, வெந்தயம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை வழங்குகிறது.

கீரையை குழம்பாக சாப்பிட பிடிக்கவில்லையென்றால் பொறியல் செய்து சாதத்தில் பிசைந்து கூட சாப்பிடலாம். அல்லது கீரை போண்டா, கீரை சப்பாத்தி, கீரை தோசை என ஏதாவது ஒரு விதத்தில் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

கோழி இறைச்சி:

கர்ப்பிணி பெண்களின் 5 வது மாதத்தில் சிறந்த உணவாக கருதப்படுவது இந்த புரதங்கள் தான். உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் இன்றியமையாதது. அதன்படி, முடிந்த வரை தினமும் கோழி இறைச்சி, கொட்டைகள், பருப்பு வகைகள், முட்டை, தானியங்கள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக கோழி இறைச்சி கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான உணவு. மற்ற இறைச்சிகளை விடவும் இது பாதுகாப்பானது. ஒருவேளை நீங்க சைவம் சாப்பிடுபவராக இருந்தால், சீஸ், வேகவைத்த கொண்டைக்கடலை, சோயா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

பழங்கள்:

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு  உணவுப்பொருள் பழங்கள். எனவே, நீங்க கர்ப்பம் தரித்தவுடன் தினமும் பழங்கள் சாப்பிடுவதை நல்ல பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். பழங்கள் சாப்பிடுவதன் மூலம்  உங்க குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் கிடைக்கிறது. இது உங்க குழந்தையின் இயற்கையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். ஆப்பிள், கிவி, ஆரஞ்சு, பேரிக்காய், வாழைப்பழம், பெர்ரி மற்றும் உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் கலந்து ஆரோக்கியமான ஸ்முத்தியாககூட சாப்பிடலாம்.

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

மீன்:

மீனில் அதிகளவு புரதம் இருக்கிறது. எனவே, வாரத்திற்கு 2 முறையாவது உணவில் மீன் சேர்த்துக்கொள்ளுங்கள். சுத்தமாக சமைக்கவேண்டியது மிகவும் அவசியம். சுகாதாரமற்றதாக இருந்தால் உங்க குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கவனத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும்போது கடல் மீன்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவற்றில் பாதரசம் போன்ற உடலுக்கு தீங்கு விளைக்கக்கூடிய கொடிய விஷயம் இருக்கும். இது உங்க குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in TamilRepresentative Image

முழுதானியங்கள்:

முழுதானியங்களில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, இரும்பு, மெக்னீசியம் அதிகளவில் இருக்கின்றன. இது உங்களுக்கும் உங்க வயிற்றில் குழந்தைக்கும் தேவையான ஆற்றலை கொடுப்பதோடு, ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதன்படி, கோதுமை, ராகி, அரிசி, ஓட்ஸ், சோளம் போன்ற முழுதானியங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்