Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vijay Devarakonda’s Fitness Secrets: இளம் பெண்களின் கனவு நாயகன் விஜய் தேவரகொண்டாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்…!!

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 12:32 [IST]
Vijay Devarakonda’s Fitness Secrets: இளம் பெண்களின் கனவு நாயகன் விஜய் தேவரகொண்டாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்…!!Representative Image.

Vijay Devarakonda’s Fitness Secrets: டோலிவுட் திரையுலகின் ஹாட் மற்றும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நம்ம விஜய் தேவரகொண்டா. “பெல்லி சூப்பலூ” என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் கால்பதித்தவர். அதன்பின் “அர்ஜுன் ரெட்டி” என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் மாஸ் ஹீரோவாக உருவாகினார். அதற்கு அடுத்து ரஷ்மிகா மந்தனாவுடன் “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரெட்” போன்ற படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டத்தது. மிகக் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல், இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் மாறினார். மேலும், 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் 72வது இடம் பிடித்து அசத்தி வருகிறார் விஜய்.

அதேபோல், மிகக் குறுகிய காலத்திலேயே சோசியல் மீடியாவிலும் அதிக பாலோவர்களை பெற்று மாஸ் காட்டி வருகிறார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் அக்டிவாக இருந்துவருகிறார். விஜய் தேவரகொண்டா போஸ்ட் போடும் அனைத்து போட்டோக்களையும் பார்க்கும் பலருக்கும் தோன்றும் ஒரே கேள்வி, முதல் படத்தில் இருந்தது போலவே இப்பவரைக்கும் தனது உடலை ஃபிட்டாகவும், ஸ்லிம்மாவும் எப்படி பராமரித்து வருகிறார் என்பது தான். இவர் தினமும் உடற்பயிற்சி செய்வதோடு உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு வருகிறாராம். வாங்க… விஜய் தேவரகொண்டாவின் கொஞ்சமும் குறையாத இளமைக்கு என்ன ரகசியம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

ஸ்கூல் படிக்கும்போது எல்லாருக்கும் ஒரு ஆசை இருப்பது போல இவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையாகவும், கனவாகவும் இருந்துள்ளது. இதனால் தான் சினிமாவிற்காக தன்னையும், தனது உடலையும் முழு அர்ப்பணிப்போடு பராமரித்து வருகிறாராம். அதுமட்டுமல்லாமல், காலேஜ் படிக்கும்போதிலிருந்தே விஜய்க்கு உடற்பயிற்சி செய்வதில் தீவிரமான நபராம்.

மேலும், இவர் சர்க்கரை மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட எந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்வதில்லையாம். இதுதான் இவருடைய ஃபிட்னஸ்க்கு முதல் காரணம். “சர்க்கரை நமக்கு நல்லதல்ல என்பதால் என்னால் முடிந்தவரை சர்க்கரையைத் தவிர்க்கிறேன் என்றும், இதை அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்” என்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதேபோல், உணவில் நிறைய காய்கறிகளை சேர்த்துக்கொள்கிறாராம். குறிப்பாக, அந்தந்த சீசன்களில் கிடைக்கும் காய்கறிகளை தான் எடுத்துக்கொள்கிறார். இதுதான் விஜய் தேவரகொண்டா எப்போதும் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க காரணம்.

எந்த அளவுக்கு டயட்டில் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு உடற்பயிற்சியிலும் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கக் கூடியவர். எவ்வளவு வேலையாக இருந்தாலும், தினமும் உடற்பயிற்சியை மட்டும் செய்யாமல் இருக்கவே மாட்டாராம். குறிப்பாக தனது ஆன் ஸ்கிரீன் லுக்கிற்காக வெயிட் லிப்டிங் போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறாராம்.

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், விளையாட்டிலும் அதிகம் கவனம் செலுத்துவாராம். இவருக்கு விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அதிலும் கிரிக்கெட், பேட்மிண்டன், கைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவது ரொம்ப பிடிக்குமாம். இதுதாங்க இவருடைய ரகசியம். நாமும் ஸ்லிம்மாக, எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், இப்போது இவருடைய பாலிசியை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.

Tags:

Vijay devarakonda’s fitness secrets | Vijay devarakonda fitnes | Vijay Devarakonda diet plan | Vijay devarakonda workout | Health diet and fitness secrets of vijay devarakonda | Fitness secrets of vijay devarakonda


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்