Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Aloe Vera Soap at Home in Tamil: பளிச்சென்ற சருமத்திற்கு கற்றாழை சோப்… வீட்டிலேயே தயாரிக்கலாம் இதுமட்டும் இருந்தா போதும்..!

Nandhinipriya Ganeshan July 08, 2022 & 13:45 [IST]
How to Make Aloe Vera Soap at Home in Tamil: பளிச்சென்ற சருமத்திற்கு கற்றாழை சோப்… வீட்டிலேயே தயாரிக்கலாம் இதுமட்டும் இருந்தா போதும்..!Representative Image.

How to Make Aloe Vera Soap at Home in Tamil: உங்களுக்கு வறண்ட சருமமா? இனி கவலை வேண்டாம். கற்றாழை சோப் பயன்படுத்துங்கள், சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும். இந்த சோப்பை நம் கையாலையே வீட்டில் தயாரிக்கலாம். அதற்கு நீங்க செய்ய வேண்டியது எல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி சரியான பதத்தில் தயாரிப்பது தான். இயற்கையான கற்றாழை சோப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 25 கிராம்

ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி

தேங்காய் எண்ணெய் – 470 மில்லி

தண்ணீர் – 130 மில்லி

காஸ்டிக் சோடா – 68 கிராம் (ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும்)

டிப்ஸ்:

❖ சோப்பில் நறுமணம் வேண்டும் என நினைப்பவர்கள் சந்தன எண்ணெய், ரோஸ்வாட்டர், லாவண்டர் ஆயில் போன்றவற்றை சோப் பேஸ்ட்டில் சில துளிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

❖ சோப்பிற்கு நிறம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தக்காளி, பீட்ரூட், கேரட், மாதுளை போன்ற இயற்கையான பொருள்களிலிருந்து சாறுகள் எடுத்து சோப் பேஸ்ட்டில் கலந்து கொள்ளலாம். ஒருவேளை சென்சிட்டிவ் ஸ்கின் என்றால் நிறம் எதுவும் தேவையில்லை.

செய்முறை:

❖ முதலில் கற்றாழை செடியை வெட்டி அதன் இலையை நீக்கிவிட்டு அதனுள் இருக்கும் ஜெல்லை மட்டும் போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

❖ இப்போது கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது எண்ணெயின் நிறம் வெள்ளையாக மாறும். இது தான் சரியான பதம்.

❖ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொத்திக்க வைக்கவும். அதில் காஸ்டிக் சோடாவை சேர்க்கவும். அதை மரக்கரண்டி கொண்டு கெட்டியாக மாறாமல் இருக்க நன்றாக கலக்கி விடுங்கள். பின்பு சூடான தண்ணீரை 10 நிமிடம் ஆற வைக்கவும்.

❖ ஆறியது, கற்றாழை கலவையில் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். இந்த கலவையின் பதம் கொஞ்சம் கெட்டியானதும் சோப் அச்சுக்களில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்.

❖ இரவுமுழுவதும் அப்படியே விட்டு காலையில் எடுத்தால் உங்கள் இயற்கையான நீங்களே செய்த கற்றாழை சோப் தயார்.

குறிப்பு: (கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் 100 கிராம் அளவுள்ள ஆறு சோப்புகள் செய்ய முடியும்)

Tags:

How to Make Aloe Vera Soap at Home in Tamil | Homemade aloe vera soap | Aloe vera soap making at home in tamil | Coconut oil and aloe vera soap recipe | Homemade aloe vera soap recipe | How to make aloe vera soap bar | Aloe vera soap benefits in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்