Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hair Tips Tamil: முடி வளர்ச்சியை தடுக்கும் 6 உணவுகள்... அழகிய கூந்தல் வேண்டுமென்றால் இதை தவிர்ப்பது நல்லது....!

Nandhinipriya Ganeshan August 17, 2022 & 11:05 [IST]
Hair Tips Tamil: முடி வளர்ச்சியை தடுக்கும் 6 உணவுகள்... அழகிய கூந்தல் வேண்டுமென்றால் இதை தவிர்ப்பது நல்லது....!Representative Image.

Foods to Avoid for Hair Growth: அழகான மற்றும் பொழிவான முடி தான் அனைவரின் கனவு. அதற்காக பலவிதமான சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதேபோல், முடி தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம். மரபணு, வயது, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் ஹார்மோன்கள் போன்ற பல காரணங்கள் முடி உதிர்வை ஏற்படுத்தலாம். 

இருப்பினும், முடி வளர்ச்சியில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உணவுத் தேர்வு. அதாவது, சில உணவு வகைகள் முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பிதற்கு பதிலாக அவற்றை சேதப்படுத்தலாம். எனவே, முடி உதிர்வை தடுக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதோடு, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியம். சரியான உணவுத் தேர்வுகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உறுதி செய்கின்றன. அதன்படி, நீங்கள் தவிர்க்க வேண்டிய மோசமான உணவுகளைப் பற்றி (hair growth tips in tamil for women's) தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால் எந்த ஊட்டச்சத்து நன்மைகளையும் கொண்டிருக்கவில்லை. இது உங்கள் உடலில் உள்ள துத்தநாக அளவைக் குறைக்கிறது, இது சரியான முடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய கனிமமாகும், மேலும் அதன் குறைபாடு மயிர்க்கால்களை வலுவிழக்கச் செய்யலாம். மேலும், அதிகப்படியான மது அருந்துதல் உங்கள் தலைமுடியை வறட்சியடையச் செய்கிறது. இது உங்கள் தலைமுடியை மிகவும் உடையக்கூடியதாகவும், கரடுமுரடான மற்றும் வறண்டதாகவும் ஆக்குகிறது, இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

இந்த நீரழிப்பு பொடுகு தொல்லையை ஏற்படுத்தும். மேலும், ஆல்கஹால் கொண்ட முடி பராமரிப்புப் பொருட்களைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் தலைமுடியை உலரவைத்து மோசமான முடிஉதிர்வதையும் ஏற்படுத்தும்.

சர்க்கரை

கெரட்டின் என்ற புரதம் முடி வளர்ச்சிக்கு இன்றியமையாதது. சர்க்கரை உடலில் புரோட்டீன் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது; இந்த புரோட்டீன் குறைபாடு திடீர் மற்றும் தற்காலிக முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கக்கூடும். இதனால், நரைமுடி மற்றும் மெல்லிய முடியை ஏற்படுத்தும். சர்க்கரை உச்சந்தலையின் தரத்தையும் பாதிக்கிறது.

டயட் சோடா

டயட் சோடாக்களில் அஸ்பார்டேம் உள்ளது, இது ஒரு செயற்கை இனிப்பு, இது வழக்கமான சர்க்கரையை விட சுமார் 200 மடங்கு இனிப்பு. இது மந்தமான முடி, முடி பிரகாசம் இழப்பு, முடி அமைப்பு ஆகியவற்றிற்கு காரணம்.  அதிகமான செயற்கை இனிப்பு சேர்க்கப்பட பானங்களை உட்கொள்ளும்போது அதிகமாக சிறுநீர் வெளிவேற செய்கின்றன. இது உடலில் கூடுதல் நீரிழப்பிற்கு வழிவகுக்கும். இது தலைவழி மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க விரும்பினால், இம்மாதிரியான பானங்களை அருந்துவதிலிருந்து விலகி இருங்கள்.

நொறுக்குத் தீனிகள்

ஜங் ஃபுட்ஸ் மிகவும் பதப்படுத்தப்பட்டவை, இதில் அதிக கலோரிகள் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து தான் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ் அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் இந்த உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுகின்றன, இது உங்கள் உச்சந்தலையில் உள்ள துளைகளை அடைத்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த உணவுகள் குழந்தை பருவ உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பிற நாட்பட்ட நோய்களை அதிகரிக்கின்றன.

உயர்-மெர்குரி மீன்

பாதரசம் என்பது அனைத்து வகையான உணவுகள் மற்றும் பொருட்களில் இயற்கையாக காணப்படும் ஒரு நச்சு உலோகமாகும், ஆனால் அவை சில அளவுகளை மட்டுமே கொண்டிருக்கின்றன; அவை நம் ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை. அதேபோல் அனைத்து மீன்களும் தங்கள் உடலில் மெத்தில்மெர்குரி வடிவில் பாதரசத்தின் அளவைக் கொண்டுள்ளன, இது மனிதர்களுக்கு அதிக நச்சுத்தன்மை கொண்டது. அந்த வகையில், வாள்மீன், சுறா, டைல்ஃபிஷ் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற பெரிய மீன்களை சாப்பிட வேண்டாம், ஏனென்றால் மற்ற கடல் உணவுகளை விட அதிக அளவு பாதரசம் காணப்படுகிறது. அது தெரியாமல் நீங்க அதிக அளவில் இவ்வகை மீன்களை உட்கொள்ளும்போது கடுமையான முடி உதிர்தலில் இருந்து ஆரம்பமாகிறது அதன் நச்சுத்தன்மை. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த அதிக பாதரசம் கொண்ட மீன்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவுகள்

அதிக கிளைசெமிக் உணவுகள் உங்கள் தலைமுடிக்கு ஏற்றதல்ல. கேக்குகள், வெள்ளை பிரெட், பாஸ்தா மற்றும் பிற மாவுச்சத்து உணவுகளும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிட்டால், அது உங்களை பாதிக்காது. ஆனால் நீங்கள் அதிகமாக உட்கொண்டால், திடீர் மற்றும் அதிகமான முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே, ஆரோக்கியமான கூந்தலுக்கு இந்த மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்