Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே சருமத்தை பளபளக்க வைக்க.. சில டிப்ஸ்!!

Sekar August 20, 2022 & 13:07 [IST]
வீட்டிலேயே சருமத்தை பளபளக்க வைக்க.. சில டிப்ஸ்!!Representative Image.

சருமத்தை பொலிவாக்க அந்த கிரீம் இந்த கிரீம் என பயன்படுத்திய காலம் போய் இப்போது இயற்கையான முறையில் சரும பராமரிப்பு என்பது தற்போது அதிக முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், இயற்கையான முறையில் வீட்டிலேயே சருமத்தை நன்றாக பராமரிப்பது குறித்த சில டிப்ஸ் இங்கே :-

1. தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வந்தால் சருமம் எளிதில் வறண்டு போகாமல் இருப்பதோடு, வறண்ட சருமமும் நீங்கி தோல் பொலிவும் புத்துணர்ச்சியும் பெறும்.

2. ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி நன்றாக மசித்து, சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு முகத்தை கழுவுங்கள். உங்கள் வறண்ட சருமம் பறந்தோடி, சருமம் பளபளக்க ஆரம்பித்து விடும்.

3. வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகை மட்டுமல்ல இதை பயன்படுத்தி சருமத்தை பளபளக்கவும் செய்யலாம். வேப்பிலையை நன்றாக பொடி செய்து, அதனுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து, அந்த கலவையை சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பாக மாறும்.

4. சந்தனம் தோலில் உள்ள வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளை குணமாக்க பயன்படுத்தப்படுகின்றது. சந்தனத்தை தோலின் வெளிப்புறமாக பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்