Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகத்துல எண்ணெய் அதிகமா வடியுதா? இதோ சிம்பிளான ஆயுர்வேதிக் ஃபேஸ் பேக்...!!

Nandhinipriya Ganeshan August 16, 2022 & 16:15 [IST]
முகத்துல எண்ணெய் அதிகமா வடியுதா? இதோ சிம்பிளான ஆயுர்வேதிக் ஃபேஸ் பேக்...!!Representative Image.

How to Remove Oily Skin Naturally in Tamil: ஒரு சிலருக்கு முகத்தில் எவ்வளவு மேக்கப் போட்டாலும் கொஞ்ச நேரத்திலேயே எண்ணெய் வழிய ஆரம்பித்துவிடும். இதனால், முகமே பொலிவிழந்து அங்காங்கே வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். இதனாலையே பலரும் மேக்கப் போடுவதற்கே தயங்குவார்கள். எண்ணெய் சுரப்பு என்பது சருமத்தை எளிதில் வறண்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும். ஆனால், அதுவே அளவுக்கு மீறினால் சிக்கல் தான். அதுவும் வெயில் காலம் வந்துவிட்டால் இன்னும் அதிகமாகிவிடும். எனவே, இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க சின்ன சின்ன வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். இதன் மூலம் அழகான, பளிச்சென்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில், இப்போது அருமையான எளிமையான ஃபேஸ் பேக் பற்றி பார்க்கலாம். இது முகத்தில் எண்ணெய் பசையை அகற்றுவதோடு, முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள், கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் அகற்றுக்கூடியது. 

தேவையான பொருட்கள்:

துளசி

வேப்பிலை

புதினா

செய்முறை:

முதலில், மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி.

முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும். 

Tags:

how to use mint leaves for oily skin, how to use mint leaves for skin, how to use mint leaves for pimples, how to use mint leaves for acne, how to remove oily skin naturally, how to remove oily skin naturally in tamil, how to remove oily skin naturally and permanently


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்