Mon ,Jan 30, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

மகப்பேறும் மறுபிறப்பும் 16: நான்கு மாத கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

Nandhinipriya Ganeshan August 15, 2022 & 13:30 [IST]
மகப்பேறும் மறுபிறப்பும் 16: நான்கு மாத கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்...Representative Image.

Second Trimester of Pregnancy in Tamil: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

கர்ப்பகாலத்தின் முதல் ட்ரைமெஸ்டர் முடிந்து இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடங்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். ஏனென்றால், முதல் மூன்று மாதம் வரை கரு தங்குமா என்ற சந்தேகத்தோடே இருப்பார்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல், மூன்று மாதங்களை கடந்து நான்காவது மாதத்தில் அடியெடுத்து வைத்தாலே மனதில் அப்படி ஒரு அளவில்லா மகிழ்ச்சி. இந்த மாதத்தில் வயிற்றில் வளரும் சிசு முழுவடிவம் பெற்றிருக்கும். அதனால், குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்க வேண்டும். அதனால், பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் சாப்பிடுவார்கள். சத்தான உணவுகளை சாப்பிடுவதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது, குழந்தைக்கு தீங்கு விளைக்கக்கூடிய ஒரு சில உணவுகளையும் தவிர்ப்பதும் அதைவிட முக்கியமான ஒன்று. இப்போது 4வது மாதத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம். 

Also Read: நான்கு மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்..

மைதா:

நான்கு மாதம் என்பதோடு, முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மைதா மாவு தான். மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது ஜூரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தும். பிரசவத்திற்குப் பிறகு மூல நோய்க்கு கூட வழிவகுக்கும். மேலும், அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரித்து தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீங்கு விளைவிக்கூடிய கர்ப்பகால நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும். எனவே, மைதாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

Also Read: ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்..

மதுபானம்:

ஒரு சில பெண்களுக்கு ஆல்கஹால் பருகும் பழக்கும் இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் அதிக அளவு மதுபானம் உட்கொள்வது குழந்தைகளின் IQ குறைவதோடு, குறைப்பிரசவத்திற்கும் வழிவகுக்கும். எனவே, ஆல்கஹால் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

Also Read: 6+ மாத குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்துமாவு தயாரிப்பது எப்படி?

கடல் மீன்கள்:

கிங் கானாங்கெளுத்தி, வாள்மீன், ஒயிட் துனா போன்ற கடல் மீன்களில் அதிக அளவு மெர்குரி (பாதரசம்) உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு மூளை பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கடல் மீன்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக சால்மன் போன்ற நன்னீர் மீன்களை எடுத்துக் கொள்ளலாம். 

Also Read: கர்ப்பிணிகள் பருக வேண்டிய ஆரோக்கிய பானங்கள்..

ப்ளூ சீஸ்:

மென்மையான பாலாடைக்கட்டிகளில் பாக்டீரியா அல்லது லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. எனவே, இது தாய்க்கு ஃபுட் பாய்சனை ஏற்படுத்தக் கூடியதோடு, குழந்தையின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையௌம் பாதிக்கும். எனவே, ப்ளூ சீஸ் மற்றும் மென்மையான பாலாடைக்கட்டிகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Also Read: உங்க சரும ஆரோக்கியத்தை கெடுக்கும் அந்த 7 இயற்கைப் பொருட்கள்..

பச்சை முட்டை & இறைச்சி:

சமைக்கப்படாத இறைச்சி மற்றும் பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா என்ற ஒரு வகையான உணவு விஷத்தை ஏற்படுத்தும் சால்மோனெல்லோசிஸ் பாக்டீரியா இருக்கலாம். இது குழந்தைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே, நீங்கள் உட்கொள்ளும் அனைத்து இறைச்சியும் முட்டையும் நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Also Read: பொடுகை விரட்டியடிக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்...

உப்பு:

உப்பு உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, வீக்கம் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, உப்பை அளவாக உட்கொள்ள வேண்டும். அதோடு, குறைந்த சோடியம் உப்பை பயன்படுத்துங்கள், இது மிகவும் ஆரோக்கியமானது. அதேப்போல் செயற்கை இனிப்புகளை தவிர்த்து, தேன், பேரீச்சம்பழம் போன்ற இயற்கை இனிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Also Read: பளபளப்பான சருமத்திற்கு இந்த ஜூஸை குடிங்க..

உலர்ந்த பழங்கள்:

உலர்ந்த பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு கொடுத்தாலும், அளவுக்கு மீறி உட்கொண்டால் ஆபத்து தான். ஒரு கப் உலர்ந்த பழங்கள் உங்களுக்கு நல்லது என்றாலும், கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் அதன் அளவை குறைத்துக் கொள்ளவும். 

Also Read: நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால் ஆபத்தா?

காஃபின்:

எல்லோருக்கும் காபி, சாக்லேட்ஸ், மற்றும் டீ போன்ற காஃபின் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவோம். ஆனால், கர்ப்ப காலத்தில் அதிக அளவு காஃபின் கொண்ட பானங்களை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் அவற்றை தவிர்க்கவும் முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், இது கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தலாம்.

Also Read: கருப்பு வைர ஆப்பிள் சாப்பிட்டு இருக்கீங்களா?

Tags:

Foods to avoid in four month of pregnancy in tamil, early pregnancy care tips, pregnancy care tips in tamil, second trimester of pregnancy, second trimester of pregnancy in tamil, what to avoid during second trimester, what to avoid during 2nd trimester, what not to eat during second trimester


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்