Second Trimester of Pregnancy Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
கர்ப்பகாலத்தின் முதல் ட்ரைமெஸ்டர் முடிந்து இரண்டாம் ட்ரைமெஸ்டர் தொடங்கும் போது கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். முதல் மூன்று மாதம் வரை கரு தங்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது அல்லவா? அதனால் கர்ப்பிணிகள் அச்சத்துடன் இருப்பார்கள். ஆனால், மூன்று மாதம் நிறைவடைந்து நான்காவது மாதத்தில் அந்த பயம் நீங்கிவிடும்.
இந்த மாதத்தில் வயிற்றில் வளரும் குழந்தை முழுவடிவம் பெற்றிருக்கும். வாந்தியும், குமட்டலும் குறைந்துவிடும் இதனால் கர்ப்பிணிகளின் மனதில் ஒரு நிம்மதி பிறக்கும். மேலும், இந்த மாதத்தில் இருந்து தொடங்கும் கருவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும். எனவே, கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இப்போது 4வது மாதத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
Most Read: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
நான்கு மாத கர்ப்பிணி சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்:
நான்காவது மாதத்தில் தாய்க்கும் சேய்க்கும் அதிக அளவு கால்சியம் தேவைப்படுகிறது. எனவே, தினமும் குறைந்தது ஒரு லிட்டர் பால் பொருட்களை (தயிர், நெய், பன்னீர்) சேர்த்துக் கொள்ளுங்கள். இது வயிற்றில் வளரும் குழந்தைக்கு வலுவான எலும்புகளை உருவாக்க உதவும்.
பச்சை காய்கறிகள், ஓட்ஸ், முழு தானியங்கள் போன்றவை நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றன. எனவே, தினமும் சேர்த்து கொள்ள வேண்டும், இது கர்ப்பத்தின் பிற்பகுதியிலும் மகப்பேறுக்கு பிறகும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
Most Read: கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்க.. உங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது..
முட்டை வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது கருவின் உயிரணுக்களை உருவாக்கி சரிசெய்வதால், வளரும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாமல், முட்டையில் உள்ள அதிக அளவு கோலின் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியமாகும். எனவே, தினமும் குறைந்தது 2 முட்டையாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழம் ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். மேலும் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
Most Read: கருகரு கூந்தலுக்கு ஹோம் மேட் ஹேர் ஆயில்.. 7 நாட்களில் முடி உதிர்வுக்கு குட் பை..!!
பருப்பு வகைகள் - சோயாபீன்ஸ், பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை அதிகளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், ஃபோலேட், கால்சியம் மற்றும் இரும்பு அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இதனால், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் மற்றும் எதிர்காலத்தில் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.
தினமும் காலை உணவின் ஒரு பகுதியாக ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள் இது குறைபிரசவம் மற்றும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…