Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 18:30 [IST]
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?Representative Image.

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 மிகி சதவீதத்தை தாண்டும் நிலையாகும். மேலும், சர்க்கரையின் அளவை பொறுத்து இரண்டு வகையாக பிரிப்பார்கள்; டைப் 1 மற்றும் டைப் 2. பொதுவாக டைப் 1 அரிதாகவே ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. டைப் 2 தான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது. வாழ்க்கை முறையில் சில முறைகளை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். இப்போது டைப் 2 சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பொதுவாக மற்றவர்கள் சாதாரணமாக சாப்பிடக் கூடிய உணவுகள் கூட இவர்களுக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் வாய்க்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம்.

❖ பழங்களை பொறுத்த வரையில் மாதுளம் பழத்தை தவிர்ப்பது நல்லது.

❖ கஞ்சி முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் வேகத்தை அதிகபடுத்தக் கூடியது.

❖ சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை சாப்பிட கூடாது.

❖ பால் வகைகளை பொறுத்த வரையில், வெண்ணெய், வணஸ்பதி, எருமைப் பால்

❖ முட்டையின் மஞ்சள் கரு, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டு இறைச்சி, அவற்றின் மூளை, ஈரல்

❖ ஃப்ரைடு ரைஸ், ஃப்ரைடு நூடுல்ஸ் போன்ற அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

❖ முக்கியமாக வெள்ளை பிரெட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் குளுக்கோஸ் சர்க்கரையின் அளவை மோசமாக்கிவிடும்.

❖ எண்ணெயில் பொரித்த முறுக்கு, சிப்ஸ், பூரி, சமோசா, இனிப்பு பலகாரங்கள்

❖ பாமாயில், வனஸ்பதி, தேங்காய் எண்ணெயில் சமைத்த திண்பண்டங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

❖ பேரிச்சம் பழம் ஒரு நாளை இரண்டிற்கு மேல் சாப்பிட வேண்டாம். அதேபோல், வாழைப்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டியது இல்லை, ஒரு நாளை ஒன்று போதுமானது.

❖ கேக், பப்ஸ், நெய்பிஸ்கட், ஐஸ்கிரீம், தக்காளி சாஸ், ஊறுகாய், மிளகாய் சாஸ், தேங்காய், வேர்கடலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடியவை:

❖ மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லா வகையான காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம்.

❖ பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை அளவோடு சாப்பிடலாம்.

❖ சூரிய காந்தி எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் ஆயில், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை உணவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

❖ டீ, காபி (அளவோடு) அதுவும் பசும் பாலில் போட்டிருக்க வேண்டும்.

❖ மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

❖ கோழிக்கறி, முட்டையின் வெள்ளைக்கரு, மீன் (வறுத்த, பொறித்த மீன் தவிர)

❖ பழங்களைப் பொறுத்த வரையில், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், திராட்சை, கொய்யா, பேரிக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்