Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Jigarthanda Recipe in Tamil: நாவில் எச்சில் ஊற வைக்கும் மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகிர்தண்டா… இனி வீட்டிலேயே செய்யலாம்..

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 16:15 [IST]
Madurai Jigarthanda Recipe in Tamil: நாவில் எச்சில் ஊற வைக்கும் மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகிர்தண்டா… இனி வீட்டிலேயே செய்யலாம்..Representative Image.

How To Make Madurai Jigarthanda at Home: ஜிகிர்தண்டா என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை தான். ஏனென்றால் ஜிகிர்தண்டா தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் கிடைத்தாலும் மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் கிடைப்பது இல்லை. ஆனால், மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் இனி வீட்டிலேயே ஜிகிர்தண்டா செய்யலாம். இதோ ரெசிபி..!!

ஜிகிர்தண்டா செய்வதற்கு மிகவும் முக்கியமான பொருள் பாதாம் பிசின். இது இருந்தால் மட்டுமே ஜிகிர்தண்டா சுவையாக செய்ய முடியும். அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும். வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இனி வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு வெறும் எலுமிச்சை ஜூலை மட்டும் போட்டு கொடுக்காமல், இப்படி ஜிகிர்தண்டா செய்து கொடுத்து அசத்துங்க.

தேவையானவை:

ஒரு கப் சர்க்கரை

5-6 பாதாம் பிசின்

1 லிட்டர் பால்

3 ஸ்பூன் நன்னாரி சர்பத்

200 கிராம் பால்கோவா

½ கப் பிரஷ் கிரீம்

1 கப் பால்

செய்முறை:

முதலில் ஒரு கப்பில் நாம் எடுத்து வைத்திருந்த பாதாம் பிசினை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10-12 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பேனை வைத்து ½ கப் சர்க்கரையை போட்டு, குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக மாறியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 4 நிமிடங்கள் கொதிக்க விட்டு, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கேரமல் ரெடி!

பின்னர், நாம் எடுத்து வைத்திருந்த பால்கோவை மிக்சி ஜாரில் போட்டு, அதில் 3 ஸ்பூன் கேரமல் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் (1 நிமிடம்) கொள்ளுங்கள்.

அரைத்த கலவையை ஒரு பிளாஸ்டிக் பாக்ஸில் ஊற்றி 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைத்து (1 நிமிடம்), அதே பிளாஸ்டிக் பாக்ஸில் ஊற்றி 6-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து வெளியே எடுத்தால் ஜிகிர்தண்டா கிரீம் ரெடி.!

இப்போது ஒரு பானில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் ½ லிட்டராக வரும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ளுங்கள். அதில் மீதமுள்ள ½ கப் சர்க்கரையை சேர்த்து, நன்றாக கலந்து விடவும்.

சர்க்கரை கரைந்தவுடன் செய்து வைத்துள்ள கேரமல் ½ கப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பின்னர் இதை ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்க.

ஜிகிர்தண்டாவிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தயார்.. ஒரு கிளாஸை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின், 3 டேபிள் ஸ்பூன் நன்னாரி சர்பத், நாம் தயாரித்து வைத்துள்ள பால் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், அதன்மீது 2 ஸ்பூன் ஐஸ்கிரீமை வைத்து ஜில்லுனு சாப்பிடுங்க..!!

டேஸ்ட்டான ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார். இந்த குறிப்பு பிடித்திருந்தால் வீட்டில் முயற்சித்து பாருங்கள்..!!

Tags:

Madurai jigarthanda recipe in tamil | Jigarthanda recipe in tamil | Jigarthanda recipe ingredients | How to make jigarthanda ice cream in tamil | How to make madurai jigarthanda in tamil | Madurai jigarthanda ingredients | How to make madurai jigarthanda at home | Jigarthanda ice cream recipe in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்