Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at Home

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image.

கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கேக் தான்.கேக் என்றாலே இனிப்பு நிறைந்தவை அதிலும் சாக்லேட் கேக் என்றால் அதில் மிக அதிகளவில் இனிப்பு சேர்த்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.சரிவாருங்கள் எல்லோருக்கும் பிடித்த கிறிஸ்துமஸ் கேக் எப்படிச் செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த பதிவில் மூன்று வகையான கேக் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image

சாக்லேட் கேக் தயாரிக்கத் தேவையான பொருட்கள்

மைதா - 2 கப் 

சர்க்கரை - 2 கப் 

முட்டைகள் - 8

வெண்ணிலா பவுடர் - 2 தேக்கரண்டி 

பேக்கிங் சோடா -  2 தேக்கரண்டி 

வெண்ணெய் - 450 கிராம் 

சாக்லேட் துண்டுகள் - 400 கிராம்

வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாகக் கலக்கவேண்டும்.

  • மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கின்ற நீரை ஊற்றி அதில் சாக்லேட் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கூழ்ப் போன்று வரும் வரை கலக்கி அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

  • பின்னர், இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து,அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும்.

  • கலக்கிய முட்டைக் கலவையுடன்,வெண்ணெய்,சர்க்கரை கலவை சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.

  • பின் அந்த கலவையுடன்,வெண்ணிலா பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொண்டு நன்றாகக் கலக்கவும்.

  • இந்த கலவையுடன் சாக்லேட் கூழ் போன்ற கலவையைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

  • முந்திரி பருப்பை  சிறிது சிறிதாகத் துருவி வைத்துக் கொள்ளலாம்.

  • கலவையுடன்,மைதா மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  • ஒரு பெரிய பாத்திரம் முழுவதுமாக வெண்ணெய் தேய்த்து இந்த கலவையை முழுவதுமாக ஊற்றிய பின் அதன் மேல் துருவிய முந்திரி துருவலை அலங்கரித்துக் கொள்ளலாம்.

  • அதன் பின் கேக் 35 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான கேக் தயார். ஆறவைத்து வெட்டி பரிமாறவும்.

வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கத் தேவையான பொருட்கள்

மைதா மாவு- 300 கிராம் 

பேக்கிங் சோடா- 3 தேக்கரண்டி 

சோடா உப்பு - அரை தேக்கரண்டி 

வெண்ணெய் - 200 கிராம் 

கேக் மசாலா - 1 தேக்கரண்டி 

கோக்கோ - 1 தேக்கரண்டி 

பால் - 100 மில்லி லிட்டர் 

செர்ரி - 50 கிராம் 

முட்டைகள் - 3 

சர்க்கரை - கால் கிலோ 

முந்திரி - 50 கிராம் 

உலர் திராட்சை - 50 கிராம் 

பிஸ்தா - 50 கிராம் 

சுல்தானாஸ் - 50 கிராம் 

வெண்ணிலா எஸ்சென்ஸ் - தேவையான அளவு 

வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன், வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  • மற்றொரு பாத்திரத்தில் கேக் மசாலா,பேக்கிங் சோடா,மைதா மாவு மற்றும் உப்பு   ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகச்  சலித்துக் கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொண்டு,அத்துடன் சர்க்கரை வெண்ணெய் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  • இந்த கலவையுடன் சலித்த மைதா மாவுவை சேர்த்து விரல் நுனியைப் பயன்படுத்தி எல்லாம் ஒன்றுசேர நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  • இந்த கலவையுடன் கோக்கோ, பால்,கராமல், சர்க்கரை, எஸ்சன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  • இந்த கலவையின் மேல் மாவு தூவிய பின்,உலர்திராட்சை,சுல்தானாஸ் மற்றும் செர்ரிப் பழங்கள்,முந்திரிப் பருப்பு சேர்த்து பேங்கிங் ட்ரெயில் ஊற்றிக் கொள்ளவும்.

  • நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.வெந்தவுடன் எடுத்து அதன் மேல்  முந்திரிப்பருப்பு மற்றும் ஐசிங் அலங்காரம் செய்து கொள்ளலாம்.

வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image

தேங்காய் கேக் தயாரிக்கத் தேவையான பொருட்கள்

மைதா மாவு - 2 கப் 

துருவிய தேங்காய் - ஒன்றரை கப் 

சர்க்கரை - ஒன்றரை கப் 

பால் - 1 கப் 

முட்டைகள் - 3

வெண்ணெய் - 1 கப் 

உப்பு - 1 தேக்கரண்டி 

வெண்ணிலா எஸ்ஸென்ஸ்  -  1 தேக்கரண்டி 

பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி

வீட்டிலேயே  பல வகையான கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி|How to Make Different Kinds of Christmas Cakes at HomeRepresentative Image

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா,உப்பு,சர்க்கரை மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாகச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.இந்த கலவையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  • மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் நன்றாகத் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால் மற்றும் வெண்ணிலா எஸ்ன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். 

  • இந்த முட்டைக் கலவையுடன்,மைதா மாவு கலவையையும்,தேங்காய் துருவலையும்  சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  • வெண்ணெய் துடவிய பாத்திரத்தில் கலக்கிய கலவையை ஊற்றி 160 டிகிரி அளவில் 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.அதன் பின் எடுத்து  வெட்டி சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்