Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வயதாகிவிடுமோ என்று பயப்படுறீங்களா? இதுவும் ஒரு நோயே!

Nandhinipriya Ganeshan September 02, 2022 & 15:20 [IST]
வயதாகிவிடுமோ என்று பயப்படுறீங்களா? இதுவும் ஒரு நோயே!Representative Image.

வயது முதிர்ச்சி என்பது இயற்கையான ஒன்று. அதை யாராலும் தடுக்க இயலாது. மனதளவில் இளமையாக இருப்பினும் உடலளவில் வயது முதிர்ச்சி என்பது வந்தே தீரும். காலம் யாருக்காகவும் நிற்காது அல்லவா! சில சமயங்களில் வயதாகிவிடுமோ என்ற பயம் நம்மில் பலருக்கும் இருப்பது இயல்பு. இருப்பினும் ஒரு சிலருக்கு இது தீவிர நிலையை எட்டிவிடுகிறது. மருத்துவ ரீதியாக இளமையை இழப்பதில் இருக்கும் இந்த பயத்தை தான் "ஜெராஸ்கோபோபியா" (gerascophobia) என்று அழைப்பார்கள். 

வயதாக ஆக, நமது உடலில் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். சுருக்கங்கள், முடி உதிர்தல், நரைத்தல், மற்றும் தசை, தோல் நெகிழ்ச்சி இழப்பு போன்றவை ஏற்படும். இருப்பினும், இவற்றை எல்லாம் மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி கொஞ்சம் வயதை தள்ளிப்போடலாம். 

ஆனால், இயற்கையில் வயது முதிர்ச்சியை தள்ளிப்போடுவது என்பது இயலாத காரியம். இருப்பினும் ஜெராஸ்கோபோபியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களால் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவற்றை விரும்பவும் மாட்டார்கள். இது சமீபகாலமாக அதிகம் வளர்ந்து வரும் பயமாகப் பார்க்கப்படுகிறது. 

ஜெராஸ்கோபோபியா வருவதற்கான காரணம்?

ஜெராஸ்கோபோபியா போன்ற குறிப்பிட்ட பயங்கள், மக்கள் தொகையில் சுமார் 4 முதல் 6 சதவீதம் பேருக்கு ஏற்படுகின்றன.

இந்த பயத்திற்கு காரணம் தனது இளமை பருவத்தில் இவர்கள் அனுபவித்த மகிழ்ச்சியான தருணங்களே. அதுமட்டுமல்லாமல், இந்த காலத்தில் முதியவர்களை அடுத்த தலைமுறையினர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் அவர்களின் வாழ்க்கை சிக்கல்களுக்கு உள்ளாகிறது. அதை பார்த்து தனக்கு வயதானாலும் இந்த நிலைமை தானா என்று பயப்படுவார்கள். 

ஜெராஸ்கோபோபியாவால் யார் பாதிக்கப்படுகிறார்கள்?

தைராய்டு செயலிழப்பு, ஹார்மோன் குறைபாடு உள்ளவர், அதீத கவலை, தனிமையில் இருப்பவர்கள், அட்ரீனல் சுரப்பில் குறைபாடு உள்ளவர்கள், கடந்தகால எதிர்மறைச் சம்பவங்களால் பாதிப்படைந்தவர்கள், மனச்சோர்வு, திடீரென வேலை இழந்தவர்கள் ஆகியோர் இந்த ஜெராஸ்கோபோபியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜெராஸ்கோபோபியா அறிகுறிகள் என்னென்ன?

மயக்கம்

தீவிரமான பதற்றம்

படபடப்பு

மூச்சுத் திணறல்

மன அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

மரணம் பற்றிய தொடர்ச்சியான எண்ணங்கள்

தன்னைத் தெளிவாக வெளிப்படுத்த இயலாமை

சிகிச்சை என்ன?

பயம் என்பது ஒரு நபரின் நடத்தை மற்றும் எண்ணங்கள் இணைக்கப்பட்டுள்ள ஒரு விதமான நிலை. அந்தவகையில், இளமையை இழப்பதில் ஏற்படும் பயத்தை போக்க வயதானவர்கள் பற்றிய படங்கள், வீடியோக்களை அவர்களிடம் காண்பிப்பது மற்றும் முதுமையை ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்குவது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், அவர்களை சுற்றி நல்ல எண்ணங்களை ஊக்கப்படுத்துவார்கள். இதனால், அவர்களுடைய எண்ணங்கள் திசைதிருப்பப்பட்டு, நடத்தை மாறும். 

மேலும், ஜெராஸ்கோபோபியா உள்ளவர்களுக்கு உதவும் பிற சிகிச்சைகளாக மருத்துவ ஹிப்னோதெரபி மற்றும் ஹிப்னோஅனாலிசிஸ் போன்றவை பயனுள்ளதாக இருப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 

65 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

gerascophobia in tamil, gerascophobia symptoms in tamil, gerascophobia treatment in tamil, what causes gerascophobia in tamil, What are the symptoms of gerascophobia


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்