Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Can I Drink Water In Empty Stomach: தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Nandhinipriya Ganeshan July 12, 2022 & 09:15 [IST]
Can I Drink Water In Empty Stomach: தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?Representative Image.

❖ பொதுவாக, நாள் ஒன்றுக்கு மனிதன் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ½ - 1 லிட்டர் வரை குடிக்கலாம். இப்படி குடிப்பதால் நம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. அதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

❖ வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் முதல் நன்மை குடலை சுத்தம் செய்கிறது. காலையில் எழுந்தவுடன் சுமார் ½ லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். அப்படி குடித்தீர்களானால் சிறிது நேரத்திலே மலம் கழித்துவிடுவீர்கள். எனவே, தினமும் வயிறு சுத்தம் ஆக வேண்டும் என்று நினைபவர்கள், இனிமேல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க ஸ்டார்ட் பண்ணுங்க.

❖ நம்மில் பலருக்கும் உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. அது தெரியாமல் என்னென்னமோ மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். இனி மாத்திரை எல்லாம் வேண்டாம். செலவே இல்லாமல், உங்க தலைவலிக்கு டிரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்றால் காலை தண்ணீர் குடிக்கும் பழக்கதை கடைப்பிடியுங்கள். இதனால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து தலைவலி வராது.

❖ நமது வயிறு சுத்தம் இல்லையென்றால், முகத்தில் பருக்கள் மூலம் காட்டிக் கொடுத்துவிடும். முகப்பருவில் இருந்து தப்பிக்க வேண்டும், சருமம் சுருக்கம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும், என்று நினைத்தால் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரை பருகுங்கள்.  

❖ நாம் ஏற்கனவே சொன்னது போல, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நச்சு கிருமிகள், கழிவுகள் எல்லாம் வெளியேறுவிடுகிறது. இதனால், பசி நன்றாக எடுக்கும். எனக்கு காலையில் பசி எடுக்கவே மாட்டிங்கிறது என்று சொல்பவர்கள் எல்லாம் தினந்தோறும் காலை நேரத்தில் தண்ணீர் குடிக்க ஆரம்பியுங்கள்.

❖ வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி பெறுகிறது. இதனால், இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை கொண்டிருக்கும். இப்படி இருக்கும் வேளையில் நம் உடலானது சுறுசுறுப்பாக இருக்கும்.

❖ அதுமட்டுமல்லாமல், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிகத்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே, உடல் எடை குறைக்க விரும்புவோர் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்