Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா…! ஒரு தட்டு ஃப்ரென்ச் ஃபிரைஸ் 15,000 ரூபாய்க்கும் மேலயா…? அப்படி இதுல என்ன இருக்கு….

Gowthami Subramani July 11, 2022 & 19:00 [IST]
அடேங்கப்பா…! ஒரு தட்டு ஃப்ரென்ச் ஃபிரைஸ் 15,000 ரூபாய்க்கும் மேலயா…? அப்படி இதுல என்ன இருக்கு….Representative Image.

Most Expensive French Fries in The World: ஃப்ரென்ச் ஃபிரைஸ் எல்லோரும் எளிதாக குறைந்த விலையில் சமைத்து அல்லது கடையில் வாங்கி உண்ணக்கூடிய ஒரு திண்பண்டமாகும். இது ஒரு தட்டு 15,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

உருளைக்கிழங்கு இருந்தால், நாம் மிகக் குறைந்த செலவிலேயே எளிதாக இந்த ஃபிரென்ச் பிரைஸ் செய்து சாப்பிட முடியும். ஆனால், இதனை இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது என்பதை எங்கயாவது பார்த்திருக்கிறீர்களா..?

ஆனால், இந்த ஆச்சரியத்தத் தரக்கூடிய இவ்வளவு அதிகமான விலையில் இருக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் ஆனது நியூயார்க் நகரத்தில் உள்ள Serendipity3 என்ற உணவகத்தில் மிக அதிக விலையில் அதாவது ரூ.15,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிரஞ்சு பொரியலுக்கான கின்னஸ் உலக சாதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது (Most Expensive French Fries in The World).

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 13 ஆம் நாள் அன்று தேசிய ஃப்ரென்ச் ஃபிரைஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் குறிக்கும் வகையில், புகழ்பெற்ற க்ரீம் டி லா க்ரீம் பொன்ஸ் ஃப்ரைட்ஸ் இதனை விற்பனை செய்வதாகக்கூறப்படுகிறது.

இதில் உள்ள ஸ்பெஷல் என்ன தெரியுமா?

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, இந்த புகழ்பெற்ற விலை உயர்ந்த ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பிரிமீயம் சிப்பர்பெக் உருளைக்கிழங்கினால் தயாரிக்கபப்டுகிறது. மேலும், பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தூய்மையான வாத்து கொழுப்பில்  இருந்து சமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு ஸ்பெஷலான முறையில் தயாரிக்கப்படுவதால் இதன் விலை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், உணவகத்தின் கின்னஸ் சாதனையாக இது முதல் உணவு அல்ல. இது மிக அதிக விலையுயர்ந்த பர்கர்களைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு பர்கர் $295 க்கு வழங்கப்படுகிறதாம். இதனைத் தவிர $1000 மதிப்பிலான விலை உயர்ந்த ஐஸ்கிரீம் Sundaes விற்பனை செய்யப்படுகிறதாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்