Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புகையிலை எதிர்ப்பு தினம் ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது தெரியுமா.? | World No-Tobacco Day 2023

Gowthami Subramani Updated:
புகையிலை எதிர்ப்பு தினம் ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது தெரியுமா.? | World No-Tobacco Day 2023Representative Image.

புகையிலை எதிர்ப்பு தினம் 2023: ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 31 ஆம் நாள் உலக புகையிலை எதிர்ப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பதிவில், புகையிலை எதிர்ப்பு தினம் ஏன் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது, அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இது குறித்த பல்வேறு தகவல்களைக் காணலாம்.

புகையிலை எதிர்ப்பு தினம் 2023

உலக சுகாதார அமைப்பின் தலைமையில், உலகளாவிய முன் முயற்சியாக புகையிலை எதிர்ப்புத் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய தீங்கான விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைகிறது.

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

உலக சுகாதார சபையின் மூலமாக, WHA40.38 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கடந்த 1987 ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு, ஏப்ரல் 7, 1988 ஆம் ஆண்டில், “உலக புகைப்பிடிக்காத நாள்” என்று கூறப்பட்டது. இந்த ஆண்டில், WHA42.19 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படியே, ஆண்டுதோறும் மே 31 ஆம் நாளில், உலக புகையிலை எதிர்ப்புத் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் நோக்கம்

இத்தினத்தின் முக்கிய நோக்கம், புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருள்கள் பயன்பாடுகளை முற்றிலும் தடுப்பதற்காக எடுக்கப்பட்டதாகும். இதன் மூலம், உடல்நலத்திற்கு ஏற்படும் அபாயங்களை விழிப்புணர்வு மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதாகும். புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் கைவிடுவதை எடுத்துக் கூறும் வகையில், புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு தனி நபரையும் ஊக்குவிக்குகிறது.

WHO-வின் செயல்பாடு

இத்தினத்தில், புகையிலையைப் பயன்படுத்துவதால் உண்டாகும் விளைவுகள் மட்டுமின்றி, புகையிலை நிறுவனங்களின் நடைமுறைகள், இதனைத் தடுக்க WHO எடுத்துள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றையும், குடிமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும், இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை உண்டாக்கவும், எதிர்கால சந்ததியைப் பாதுகாக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்