Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்...!

Nandhinipriya Ganeshan August 10, 2022 & 10:15 [IST]
வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்...!Representative Image.

Can I Eat Curry Leaves in Empty Stomach: நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை சத்துக்கள் அனைத்தும் நம் வீட்டின் சமையலறையிலேயே தான் இருக்கிறது. ஆனால், அவைவெல்லாம் நம் கண்களுக்கு தெரிவதில்லை. அதைவிட்டுவிட்டு எடுத்துவுடனே ஆஸ்பிட்டலுக்கு தான் ஓடுகிறோம். ஆனால் நம் சமையல் அறையில் இருக்கும் உணவுகளை வைத்தே பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும், பல  நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும். அப்படி, நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் சூப்பர் இயற்கை மருந்துகளில் ஒன்று தான் கறிவேப்பிலை. இதை சாப்பாட்டில் கண்டாலே ஒதுக்கி தான் வைப்போம். ஆனால், உண்மையில் இதில் எத்தனை மருத்துவ குணங்கள் கொட்டிகிடக்கின்றது தெரியுமா!

கறிவேப்பிலை சட்னிய இப்படி செஞ்சி பாருங்க.. 

பொதுவாக, ஒரு சில உணவுப்பொருட்களை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், பச்சையாக சாப்பிடும் சாப்பிடும் போது கூடுதல் பலன்கள் உடலுக்கு கிடைக்கின்றன. அதில் கறிவேப்பிலையும் ஒன்று, இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், காப்பர், இரும்பு, மெக்னீசியம் என ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், இந்த கறிவேப்பிலையை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலில் பலவிதமான அற்புதங்கள் நிகழ்கின்றன. 

வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா?

❖ அதாவது, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4-5 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் மாலைக்கண் மற்றும் பல கண் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

❖ அதேபோல், சர்க்கரை நோயாளிகளும் இந்த முறையில் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருக்கும். 

❖ பல நாட்களாக மலச்சிக்கல், வயிறு உப்பசம், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்கள், கறிவேப்பிலையை தினமும் காலை நேரத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதுமானது. 

உலர் திராட்சையை இப்படி சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்குமாம்..

❖ அதுமட்டுமல்லாமல், இதில் காணப்படும் ஆண்டிபையடிக் தன்மைகள் தொற்று நோய்கள் வராமலும் தடுக்கக்கூடியது. எனவே, இந்த பலன்களை செலவே இல்லாமல் பெற வேண்டும் என்று நினைத்தால் தினமும் 4-5 கறிவேப்பிலையை சாப்பிட்டு தான் பாருங்களேன்..

Tags:

Health benefits of eating curry leaves in empty stomach, Can i eat curry leaves in empty stomach, How many curry leaves to eat per day, Curry leaves benefits in tamil, Karuveppilai benefits in tamil, Verum vayitril karuveppilai sapidalama 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்