Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing Reasons

Gowthami Subramani Updated:
வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image.

தூங்கும் போது வாயைத் திறந்து கொண்டு தூங்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சிறியவர், பெரியவர்கள் என்றில்லாமல், அனைவருமே இதனை அனுபவிப்பது உண்டு. இவ்வாறு வாய் திறந்து தூங்கும் பழக்கம் இருப்பதற்கு உடல் நிலையில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் வாயின் வழியாக மூச்சு விடுவர். இது போன்று வேறு சில காரணங்களும் உள்ளது. அதனைப் பற்றி இதில் காணலாம்.

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image

வாய் வழியாக சுவாசித்தல்

சிலர் தூங்க தொடங்கும் போது எப்போதும் போல, சாதாரணமாகத் தொடங்கினாலும், நன்றாக அசந்து உறங்கும் போது வாயைத் திறந்து கொண்டு தூங்குவர். பெரும்பாலும் மூக்கு வழியாக மூச்சு விடுவதில் சிரமப்படுகிறவர்களுக்கு, வாய் திறந்து தூக்கும் பழக்கம் இருக்கும். மூக்கு வழியாக சரியான முறையில் ஆக்ஸிஜனைப் பெற இயலாதவர்கள், இப்படி வாயைத் திறந்து தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுவர். இந்த பிரச்சனையை பெரும்பாலானோர் சந்திப்பர். மூச்சுத்திணறல் தவிர வாய் திறந்து தூங்குவதற்கான மற்ற சில காரணங்கள் பற்றி இதில் காணலாம்.

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image

பதற்றம், மன அழுத்தம்

பொதுவாக, அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், பதற்றம் கொண்டவர்களுக்கும் சுவாசம் கடினமாகிறது. இதனால், அவர்கள் வாய் வழியாகச் சுவாசிக்க வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணம், ஒருவர் மன அழுத்தத்துடன், கவலையாக இருக்கும் போது, அவர்களின் சுவாச விகிதம் அதிகரிக்கிறது. இதனுடன், இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, வாயைத் திறந்து அதிகமாக சுவாசம் செய்கின்றனர்.

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image

ஒவ்வாமை

டஸ்ட் அலர்ஜி எனப்படக்கூடிய ஒவ்வாமையும் வாய் சுவாசத்திற்குக் காரணமாகும். வெளிப்புறத்தில் இருந்து ஒரு துகள் உடலுக்குள் செல்லும் போது, நோய் எதிர்ப்பு அமைப்பு அதனை உடனடியாக எச்சரிக்கையாகி, அதனைத் தாக்குகிறது. இதில் ஏற்படும் ஒவ்வாமையால், பாதிக்கப்பட்ட நபர் அதிகமாக சுவாசிப்பர். இந்த ஒவ்வாமையை அழிக்கும் முயற்சியிலேயே சிலர் வாய் வழியாக சுவாசம் செய்கின்றனர்.

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image

ஆஸ்துமா

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், மூக்கு வழியாக மூச்சு விடுவது மிகவும் கடினமாக இருக்கும். இவ்வாறு மூச்சு விடத் திணறுபவர்கள் வாய் வழியாக மூச்சு விடுவர். பொதுவாக ஆஸ்துமா நோய் குணமடைய நீண்ட காலம் எடுக்கும். மூச்சுத் திணறல், சுவாசக்குழாயில் நெரிசலை உண்டாக்குகிறது. இதனால், உடலானது வாய் வழியாக சுவாசிக்கப் பழகுகிறது.

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

ஸ்லீப் மூச்சுத்திணறல் என்பது ஒரு வகையான உடல் நலப் பாதிப்பு நிலை ஆகும். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூங்கும் போது வாய் வழியாக சுவாசிக்கின்றனர். தடையற்ற தூக்கம் வரும் போது, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது காற்றோட்டத்தை ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கிறது.

வாய் திறந்து மூச்சு விடுகிறார்களா? அதுக்கு இது தான் காரணம்! | Mouth Breathing ReasonsRepresentative Image

சளி, இருமல்

மூக்கடைப்புடன் ஜலதோஷமும் இருக்கும் போது, உடல் முழுவதும் ஆக்ஸிஜன் பெறுவதற்கு வாய் வழியாகவே சுவாசிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சளியின் காரணமாக சைனஸ் நோய் வந்தாலும், மூக்கு வழியாக சுவாசிப்பவர்கள் வாய் வழியாகவே சுவாசிக்கிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்