Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Healthy Foods for Women: பெண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 36 சத்து நிறைந்த உணவுகள்...! 

Nandhinipriya Ganeshan September 03, 2022 & 10:45 [IST]
Healthy Foods for Women: பெண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 36 சத்து நிறைந்த உணவுகள்...! Representative Image.

Healthy Foods for Women: ஒரு பெண்ணாக இருப்பதும், ஆரோக்கியமான உடலை பராமரிப்பதும் எளிதான காரியம் அல்ல. அது எந்த தோல் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது நாள்பட்ட நோயாக இருந்தாலும் சரி; வயதாகும்போது பெண் உடல் அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியமாக இருப்பது கடினம். எனவே, இங்குள்ள அனைத்து பெண்களும், வலுவான நோயெதிர்ப்பு சக்தியை பராமரிக்க, அவர்களின் உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை கருத்தில் கொண்டு உங்கள் மெனுவை நீங்கள் மதிப்பாய் செய்ய வேண்டிய நேரம் இது. 

"எப்படி சாப்பிடுகிறாயோ அப்படி தான் இருப்பாய்" என்ற பழமொழி உண்மைதான். அந்த வகையில், உங்களுடைய அன்றாட உணவு உங்களின் அனைத்து உடல்நலக் கவலைகளையும் சமாளிக்கும் தீர்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு பல பொறுப்புகள் இருந்தாலும், உங்களுக்காகென சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க கீழ்க்காணும் உணவு வகைகளை சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதேப்போல், கற்பிணி பெண்களும் (healthy food for pregnant women) அத்தியாவசியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அவர்களும் இந்த உணவுப் பொருட்களை சாப்பிடலாம், ஆனால் அதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும். 

பெண்களின் ஆரோக்கியத்திற்கான சில சத்தான உணவுகள்:

பூண்டு

இது குளிர்ச்சியிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது, மேலும் பாக்டீரியா, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. பூண்டில் உள்ள அற்புதமான நற்குணம் உங்களை இளமையாகக் காட்டக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பதைத் தூண்டவும் பயன்படுகிறது. 

தக்காளி

இதய பிரச்சனைகள் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து தக்காளி நம்மை பாதுகாக்கிறது. மேலும், தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளக்க வைத்திருக்க உதவுகிறது. 

லிச்சி

லிச்சியில் இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் பாலிபினால்கள் மற்றும் முக்கிய சேர்மங்கள் இருக்கின்றன. இது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பேருதவியாக இருக்கும். அதன் கூழ் ருசி கூடுதல் நன்மை.

மாதுளம் பழம்

மாதுளையில் உள்ள பாலிபினால்கள் நல்ல இரத்த ஓட்டத்தையும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் நிலைநிறுத்துகிறது, இது பெண்களின் உடலுக்கு இன்றியமையாதது ஒரு ஊட்டச்சத்து. இது தொற்று நோய்களையும் தடுக்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவை பராமரிக்கும் மற்றும் நல்ல நரம்பு செயல்பாட்டிற்கு உதவும். தோல் மற்றும் கூந்தலுக்கும் வாழைப்பழம் சிறந்தது.

நட்ஸ்

வால்நட்ஸ், ஹேசல்நட்ஸ், பாதாம் ஆகியவற்றில் ஒமேகா-3, அர்ஜினைன், பாலிபினால்கள் நிறைந்திருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. இருப்பினும், அதிக கலோரி எண்ணிக்கையைக் கொண்டிருப்பதால், ஒரு நாளைக்கு 1/3 அவுன்ஸ் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் இணைந்து செயல்படுகின்றன.

பீன்ஸ்

பீன்ஸ் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரம். இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இதன் காரணமாக பீன்ஸ் சூப்பர்ஃபுட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

அவகேடோ

இந்த மென்மையான அவகேடோ பழம் இதய பிரச்சினைகள் மற்றும் மாகுலர் கண் சிதைவைத் தவிர்க்க நல்லது. எடை இழப்புக்கும் அவகேடோ சிறந்தது.

ப்ரோக்கோலி

உங்கள் உணவுப் பட்டியலில் ப்ரோக்கோலி இருந்தால், உயிருக்கு ஆபத்தான நோய்கள் உங்களை நெருங்கவே முடியாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதை ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும். 

ஆப்பிள்

ஆரோக்கியமான பழமான ஆப்பிள் உங்கள் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டு பாருங்கள் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

கொய்யாப் பழம்

நல்ல குடல் செயல்முறையைப் பெற, கொய்யா ஸ்மூத்தியை தினமும் குடிங்க. மேலும், இது இதய நோய் அல்லது ஏதேனும் இரைப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குறைக்கும்.

எலுமிச்சை

வைட்டமின் சி, புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல்கள், எடை இழப்பு மற்றும் செரிமானத்தை அதிகரிப்பது ஆகியவற்றைத் தவிர, எலுமிச்சை உங்கள் சருமத்தை குறைபாடற்றதாகவும், பொலிவோடும் வைத்திருக்கும். 

மீன்

வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் இதய நோய்களைத் தவிர்த்து, சருமத்தை அழகாக மாற்றுகிறது. கலோரிகளை எரிப்பது என்பது மீனின் கூடுதல் நன்மை.

பூசணி

பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பார்வைக்கு இன்றியமையாதது.

ஆரஞ்சு

ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் சி, பி1 மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றால் நிறைந்துள்ள ஆரஞ்சு, பார்வையைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்கவும் உதவுகிறது.

காளான்

காளான் கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உங்கள் உடலில் கட்டிகள் அல்லது புற்றுநோய் செல்கள் வளருவதை எதிர்த்து போராடுகிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், கண் சோர்வு மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும் பண்பு கொண்டது. தினசரி உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

அத்தி

உங்கள் காலை உணவில் அத்திப்பழங்களை சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு நல்லது. ஏனெனில், இதில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் முதுமையின் காரணமாக ஏற்படும் பல நோய் பிரச்சனைகளில் உங்களை காக்கிறது.

முட்டை

பொதுவாக, அதிக கலோரி எண்ணிக்கை காரணமாக முட்டையின் மஞ்சள் கரு தவிர்க்கப்படுகிறது. ஆனால், மற்ற உணவுப் பொருட்களில் எளிதில் கிடைக்காத நூற்றுக்கணக்கான உயிர்ச் சத்துக்களின் களஞ்சியமாகவும் இது இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டும் சாப்பிடுங்கள்.

பசலைக் கீரை

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது.

பெல் மிளகு

மிளகுத்தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, கீல்வாதம் அல்லது மூட்டு/முழங்கால் வலி போன்றவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன.

இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் பார்வை மற்றும் தோல் மட்டுமல்லாது உங்கள் சுவாசம், சிறுநீர் மற்றும் குடல் பாதையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ எடை இழப்புக்கு உதவுகிறது, டெர்மினல் நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை எவ்வாறு சரிசெய்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

காபி

ஒரு நாளைக்கு 2-3 கப் காபி உங்கள் நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது, அதே நேரத்தில், தோல் புற்றுநோய், டிமென்ஷியா, அல்சைமர் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளையும் குறைக்க உதவுகிறது.

பாப்கார்ன்

சாதாரண பாப்கார்ன் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும் மற்றும் இதில் கலோரிகள் இல்லை. இதன் அழற்சி எதிர்ப்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்களை மாரடைப்பு, மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுகின்றன.

ஆளிவிதை

தினமும் 10 கிராம் ஆளி விதைகளை உட்கொள்வது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அவை ஒமேகா -3 இன் சக்திவாய்ந்த மூலமாகும், இது இரத்தக் கட்டிகளை அகற்றுவதன் மூலம் உங்கள் இதய பிரச்சனைகளைத் தடுக்கிறது.

பிநட் பட்டர்

யம்மியாகவும், டேஸ்டாகவும் இருக்கும் இந்த பட்டர் உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது. இதில் உள்ள தாதுக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் பராமரித்து, நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது.

உளுத்தம் பருப்பு

பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் வாய்ப்புகளை குறைக்கிறது, இரத்தத்தில் ஒரு சீரான சர்க்கரை அளவை பாதுகாக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

ஒயின்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒயின் ஆரோக்கியமான இரத்த நாளங்களுக்கு உதவ அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இது கொழுப்பு செல் அடுக்குகளின் வளர்ச்சி மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

பிரவுன் ரைஸ்

பிரவுன் ரைஸில் உள்ள செலினியம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிக அளவில் வைத்திருக்கிறது. ஒரு கப் பிரவுன் அரிசி உங்கள் மூளை மற்றும் இதய நலனுக்காக மாங்கனீசு மற்றும் நியாசின் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குகிறது.

தயிர்

இதில் கால்சியம், நோயெதிர்ப்பு வலுப்படுத்தும் பாக்டீரியா மற்றும் இரட்டை புரதம் நிறைந்துள்ளது. உங்கள் தினசரி உணவில் தயிரை கட்டாயமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

ஓட்மீலில் புரதச்சத்து நிறைந்துள்ளது, மேலும் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சியை உட்கொள்வதால் வயிறு நிரம்பாமல் இருக்கும். இதய நோய்கள் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடும் அற்புத குணம் இதற்கு உண்டு.

சிக்கன்

கிரில்டு சிக்கனை சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் எலும்புகள் மற்றும் தமனிகளை வலுவாக வைத்திருக்கும்.

ஆலிவ் ஆயில்

அடுத்த முறை காய்கறிகளை வதக்கும் போது வெர்ஜின் (Virgin) ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி சமையுங்கள். இது தேவையற்ற உடல் எடையை குறைக்கவும், இதய பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டுகளில் ஃபிளாவனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை ஆரோக்கியமானவை. தமனிகள் அடைப்பதைத் தடுக்கிறது, ஏனெனில் அவை பிளேட்லெட்டுகளைத் தடுக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்