Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதவிடாய் நாட்களில் பெண்கள் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.. | Side Effects of Washing Hair During Periods in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மாதவிடாய் நாட்களில் பெண்கள் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.. | Side Effects of Washing Hair During Periods in Tamil Representative Image.

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையான ஒன்று. இந்த நேரத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் நாட்களின் முதல் மூன்று நாட்களும் வழக்கமாக செய்யும் பணிகளை செய்ய அசௌகரியம் ஏற்படும். அதனால் தான் முன்பெல்லாம் மாதவிடாய் நாட்களில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று வீட்டின் ஒரு அறையில் உட்கார வைத்திருப்பார்கள். ஏனென்றால், அந்த நாட்களில் பெண்களுக்கு அதிகப்படியான ஓய்வு தேவைப்படுகிறது. அந்த காலத்தில் மாதவிடாய் நாட்களில் (தீட்டு) பெண்களை ஒதுக்கி வைத்ததற்கான காரணமும் இதுதான். 

மாதவிடாய் நாட்களில் பெண்கள் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.. | Side Effects of Washing Hair During Periods in Tamil Representative Image

ஆனால், இந்த காலத்தில் பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதனால், அந்த மாதிரியான சமயத்தில் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.. என்னெல்லாம் செய்ய கூடாது.. என்று பல்வேறு நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். அதில் ஒன்று தான் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தலைக்கு குளிக்க கூடாது என்ற நடைமுறை. உண்மையில், அந்த காலத்திலேயே இருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. 

அதாவது, அப்போதெல்லாம் பெண்கள் குளிக்க கிணறு, ஏரி, குளங்களில் தான் குளிப்பார்கள். மற்ற நாட்களை காட்டிலும் மாதவிடாய் காலத்தில் குளிக்கும்போது தண்ணீரால் பல தொற்றுகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தான் மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொன்னார்கள். தற்போது, அனைவருக்கும் வீட்டுக்கு வீடு ஒன்றுக்கு இரண்டு குளியலறைகளை வைத்துள்ளோம்.. இப்பவும் குளிக்கக் கூடாதா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. 

மாதவிடாய் நாட்களில் பெண்கள் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.. | Side Effects of Washing Hair During Periods in Tamil Representative Image

நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது என்று சொல்வதற்கு பின்னால் ஆயிரம் காரணம் இருக்கும்.. அதே காரணம் இதற்கு பின்னாலும் இருக்கிறது. அதாவது, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது உதிரப்போக்கு சீராக வெளியேற வேண்டுமென்றால் உடல் சூடாக இருக்க வேண்டியது அவசியம். அந்த சமயத்தில் நாம் தலைக்கு குளிக்கும்போது உடல்சூடு தணிந்து குளிர்ச்சியாகிவிடும். 

இதனால், உதிரப்போக்கு சீராக வெளியேறாமல் உறைந்துவிடுவதுடன், வயிற்று வலி மற்றும் கட்டி ஏற்படுகின்றது. இவை சில தருணங்களில் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது. அதோடு உடல் சூட்டில் இருக்கும்போது தலைக்கு குளிக்கும்போது சிலருக்கு சளி, தும்மல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தலைக்கு குளிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்று நாளில் இரத்தப்போக்கு குறைவாக இருக்கும் என்பதால் அதன் பின்பு தலைக்கு குளித்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்