Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

Heart Attack Symptoms in Tamil: உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்று இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

Priyanka Hochumin June 15, 2022 & 11:30 [IST]
Heart Attack Symptoms in Tamil: உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்று இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!Representative Image.

Heart Attack Symptoms in Tamil: இந்த அவசர உலகத்தில் மக்கள் தங்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், ஒரு நாளில் ஆயிரக்கணக்கானோர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். அதற்கான அறிகுறிகள், எதனால் ஏற்படுகிறது போன்ற முக்கிய விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அந்த காலத்தில் வயது மூப்பினால் மக்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். ஆனால் தற்போது 30 வயதிற்கு மேல் யார் வேண்டுமானாலும் திடிரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துவிடுகின்றனர். நாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம், இருப்பினும் எப்படி மாரடைப்பு ஏற்படுகிறது என்று அனைவரும் குழம்பி வருகின்றனர். மாரடைப்பு

நம்முடைய இதயம் தினமும் அயலாது சுருங்கி விரிவதால், உடலில் உள்ள அணைத்து பகுதிகளுக்கும் ரத்தம் சென்றடைகிறது. ரத்தம் மூலமாக மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சத்து கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் பொழுது, திடிரென்று ரத்தம் உறைந்து இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்தம் தடுக்கப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இது ஒரு மருத்துவ அவசரமாக கருதப்படுகிறது. நம்முள் நிறைய பேத்துக்கு மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்று தெரியாமல் இருப்பது தான் இந்த நோயின் பல இறப்பிற்கு காரணம்.

இதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் வகையில் கனடா, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருக்கும் தளங்களில் கரோனரி நோய்க்குறிய சிகிச்சை (Treatment of coronary syndrome) அளிக்கப்பட்டு நோயாளிகளை கண்காணித்து வந்தனர். அந்த வகையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை விளக்கமாக கூறியுள்ளனர்.


Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி…! எப்படி பெறுவது..? யார் யாரெல்லாம் பெறலாம்… முழு விவரங்கள் இங்கே….! imageFree Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி…! எப்படி பெறுவது..? யார் யாரெல்லாம் பெறலாம்… முழு விவரங்கள் இங்கே….!.


சோர்வு

மாரடைப்பு ஏற்படப்போகும் நோயாளிகளுக்கு உடல் சோர்வு ஏற்படும். மேலும் சரியான தூக்கம் இல்லாமல் மற்றும் வயது சமந்தமான வலி ஏற்பட்டு அவர்கள் வருந்தலாம். மாரடைப்பு ஏற்படும் 3 பேரில் இரண்டு பேத்துக்கு நெஞ்சு வலி, மூச்சு திணறல் மற்றும் உடல் சோர்வு ஒரு வாரத்திற்கு முன்னர் உணர்வார்கள் என்று கூறப்படுகிறது.

கவலை

கவலை, மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமல்லாது சாதாரண வாழ்க்கையை வாழும் மக்களுக்கும் பொதுவான ஒன்று. இந்த கவலை தான் உடலில் பாதி நோய்களை ஏற்படுத்துகிறது. எனினும் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு இது 99% காணப்படுகிறது. ஒரு சிலருக்கு தங்களின் உடலில் ஏதோ தவறு நடக்கப்போகிறது என்னும் உணர்வு அவர்களை வாட்டி வதக்கும். நீங்கள் அறியாமல் உங்களுக்கு உயிர் மீது கவலை ஏற்பட்டால் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.

பலவீனம்

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே அவர்களின் கைகள் பலவீனமாக இருப்பது போல் உணர்வார்கள். மேலும் முதுகு, தாடை, கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் வலி அல்லது ஏதேனும் அசௌகரியத்தை அனுபவிக்கலாம். கூடுதலாக, மார்பு அல்லது தொண்டை பகுதியில் வலி, இரைப்பை ரிஃப்ளக்ஸ், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த எல்லா அறிகுறிகளும் ஏற்படும் என்று கூறமுடியாது, இது ஒருவருக்கு ஒருவரின் உடல் நிலையை பொறுத்து மாறும்.

தூக்கமின்மை

ஆராய்ச்சியாளர்களின் படி, தூக்கமின்மை, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மனா அழுத்தத்தை அதிகரிக்கும், ஆரோக்கியமான உடல் செயல்பாட்டை சீர்குலையச் செய்யும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடி தேடி சாப்பிட தூண்டும். பொதுவாக உடல் பருமன் மற்றும் இதய செயலிழப்பு இருப்பவர்களுக்கு குறட்டை ஏற்படும். எனவே, தூக்கமின்மை இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


Agneepath Scheme in Tamil: அக்னிபாட் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு….! இராணுவத்தில் இருக்கும் புதிய ஒப்பந்த முறை….!Agneepath Scheme in Tamil: அக்னிபாட் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு….! இராணுவத்தில் இருக்கும் புதிய ஒப்பந்த முறை….!


திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்யணும்?

உங்கள் குடும்பத்தில் அல்லது நீங்கள் பயணிக்கும் பொழுது உங்களுக்கு அருகில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால்,

  • முதலில் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள அவசர மருத்துவ சேவைக்கு (EMS) அழைத்து நடந்ததை தெரிவிக்கவும்.
  • மாரடைப்பு ஏற்படும் பொழுது, இதய துடிப்பு வேகமாக செயல்படுவதால் எந்த அழுத்தமும் இல்லாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும். அல்லது ஏதேனும் இனிப்பு கொடுத்து உங்களை அலல்து அருகில் இருப்பவரை அமைதிப்படுத்தவும்.
  • ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்தால், அவர்களின் இதய துடிப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கவும். அப்படி இதய துடிப்பு கேட்கவில்லை என்றால் உடனே CPR செய்து அவர்களை முதலில் காப்பாற்றவும், பின்பு அவசர சிகிச்சைக்கு அழைத்து உதவி கேட்கவும்.

Heart Attack Symptoms in Tamil, Heart Attack Symptoms in Tamil for a women, Heart Attack Symptoms females, Heart Attack Symptoms in men, Heart Attack Symptoms 30 year old women, Heart Attack causes, Heart Attack treatment, Heart Attack first aid, Heart Attack vs cardiac arrest, Heart Attack pain areas, 

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்