Sat ,Feb 24, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

High Blood Pressure Symptoms: இரத்த அழுத்தத்தை குறைக்க எளிமையான வழிகள் இதோ!

Priyanka Hochumin May 17, 2022 & 11:35 [IST]
High Blood Pressure Symptoms: இரத்த அழுத்தத்தை குறைக்க எளிமையான வழிகள் இதோ!Representative Image.

High Blood Pressure Symptoms: ஹைப்பர்டென்ஷன் என்று அழைக்கப்படும் இந்த உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு என்னென்ன தீங்குகளை அளிக்கிறது, அதற்கான காரணம் மற்றும் அறிகுறிகள் போன்ற முக்கிய விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள். 

உயர் ரத்த அழுத்தம் ஏற்பட காரணம்:

நமது உடலில் செயல்படும் ஒவ்வொரு உறுப்புகளுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன், இரத்த ஓட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த இரத்த ஓட்டம் சரியான நிலையில் இருக்க வேண்டும், அது சற்று அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமக்கு சிக்கலாகி விடும். உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும் இதுவே ஒரு முக்கிய காரணமாகும். இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் (artery wall) இரத்தம் பாயக்கூடிய வேகம் மற்றும் உங்கள் இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் நீண்ட காலமாக இரத்தம் பம்ப் செய்யும் அளவு அதிகரித்தால், உங்கள் தமனிகள் குறுகியதாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இறுதியில் இது இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.  

இரத்த அழுத்த அளவீடு மில்லிமீட்டர் மெர்குரியில் (mm Hg) கொடுக்கப்படுகிறது. இதில் மொத்தம் இரண்டு எண்கள் இருக்கிறது. 

மேல் எண் (சிஸ்டாலிக் அழுத்தம்) - இந்த முதல் அல்லது மேல் எண் எதை அளவிடுகிறது என்றால், இதயம் துடிக்கும்போது உங்கள் தமனிகளில் உள்ள அழுத்தத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது. 

கீழ் எண் (டயஸ்டாலிக் அழுத்தம்) - இதய துடிப்புகளுக்கு இடையில் உங்கள் தமனிகளில் அழுத்தத்தை அளவிட, இரண்டாவது அல்லது குறைந்த எண் உபயோகப்படுகிறது. 

 உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்:

உங்கள் உடலில் நீண்ட காலமாகவே உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம். உங்களின் அதனின் அறிகுறிகள் கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையை அடையும் வரை பொதுவாக ஏற்படாது. இருப்பினும் நீங்கள் பயப்பட தேவையில்லை. எனவே, தான் 30 வயது தாண்டிய பின்பு வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் உங்கள் உடலின் செயல்பாடுகளை நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கலாம். ஏதேனும் சிரமங்கள் இருந்தால் உடனே தெரிந்துகொள்ளல்லாம்.

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? என்பதை இந்த குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

 • கடுமையான தலைவலி
 • மூச்சு விட சிரமப்படுதல்
 • கலைப்பு
 • நெஞ்சு வலி
 • மிகவும் ஆபத்தான நிலையில் சிறுநீரில் இரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது உறுதியாகிவிடும்.

உயர் இரத்த அழுத்தம் வகைகள்:

இது முக்கியமாக இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

பிரைமரி (அத்தியாவசிய):

பெரும்பாலும் முதியவர்கள், பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உருவாக்கிய காரணம் தெரியாது. ஏனென்றால், இந்த பிரைமரி இரத்த அழுத்தம் வகைகள் அவர்களின் உடலில் பல ஆண்டுகளாக படிப்படியாக உருவாகியிருக்கும்.

செகண்டரி:

அடிப்படை நிலை (underlying condition) காரணமாக உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அது செகண்டரி உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படும். பல மருந்துகள் மற்றும் கண்டிஷன்கள் இந்த செகண்டரி உயர் இரத்த அழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கிறது. அவை,

 • சிறுநீரக நோய்
 • தைராய்டு பிரச்சனைகள்
 • தூக்கத்தில் மூச்சுத்திணறல்
 • கருத்தடை மாத்திரைகள், குளிர் நிவாரணிகள் போன்ற சில மருந்துகள் ஆகியவை வழிவகுக்கிறது.    

யாருக்கு அதிக வாய்ப்பு?

பொதுவாக இவருக்கு மட்டும் தான் வரும் மற்றவர்களுக்கு வராது என்று குறிப்பிட முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் பெரும்பாலும்

 • வயது முதிர்ந்தவர்கள்
 • குடும்ப வரலாறு - வம்சா வழியாக தொடர்வது
 • அதிக உடல் வெயிட் கொண்டவர்கள்
 • அதிகாமாக உப்பு சேர்த்துக் கொள்பவர்கள்
 • ஸ்ட்ரெஸ்
 • புகையிலை மற்றும் குடிப்பழக்கம் இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்