Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Honey Kolukattai Recipe in Tamil: விநாயகர் சதுர்த்தி 2023 ஸ்பெஷல் தேன் கொழுக்கட்டை செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan September 07, 2023 & 10:40 [IST]
Honey Kolukattai Recipe in Tamil: விநாயகர் சதுர்த்தி 2023 ஸ்பெஷல் தேன் கொழுக்கட்டை செய்வது எப்படி?Representative Image.

Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை செய்து நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த சுவையான கொழுக்கட்டையை பல விதமாக செய்யலாம். அந்தவகையில், வித்தியாசமான சுவையில் கோதுமை மாவை கொண்டு தேன் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம். இது செய்வது மிகவும் எளிது. 

Also Read: நெய் பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்

வெல்லம் - 3 டீஸ்பூன் (துருவியது)

தேன் - 2 ஸ்பூன்

ஏலக்காய் - 1

திராட்சை - 5

முந்திரி பருப்பு - 5

நெய் - 1 டீஸ்பூன்

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

உப்பு தேவைக்கேற்ப

Also Read: உப்பு சீடை செய்வது எப்படி?

செய்முறை:

முதலில், ஒரு டீஸ்பூன் நெய்யில், முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், தேங்காயை அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு வடிகட்டி கொண்டு வடித்துக் கொள்ளவும். 

இப்போது, ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அந்த மாவை மிருதுவாக பிசைந்து, இரண்டு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.அதை சப்பாத்தி கட்டையில் போட்டு இருபுறமும் கோதுமை மாவை தூவி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். 

பின்னர், அதை ஒரு கத்தியை பயன்படுத்தி, மாவு முழுவதும் கீறல் போட்டு சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு உருண்டையையும் அதேபோல் தேய்த்து, வெட்டிக் கொள்ளுங்கள். 

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 11/4 கப் தன்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் வெட்டிப்பட்ட துண்டுகளை பாதியாக சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடுங்கள். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்படி கவனமாக கலக்கிவிடவும். 

5 நிமிடங்களுக்கு பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். தீயை குறைத்து நாம் தயாரித்து வைத்திருந்த தேங்காய் பால், ஏலக்காய், வறுத்த திராட்சை, முந்திரியை சேர்த்துக் கொள்ளுங்கள். 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வேக வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு, எடுத்து வைத்துள்ள தேனை சேர்த்து நன்றாக கலக்கி சூடாக பரிமாறவும்.

அவ்வளவு தான்! சுவையான தேன் கொழுக்கட்டை ரெடி.. இந்த குறிப்பு பிடித்திருந்தால், விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு செஞ்சிக்கொடுத்து அசத்துங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்