Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி? 

Nandhinipriya Ganeshan September 10, 2022 & 16:20 [IST]
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி? Representative Image.

சமீப காலமாகவே தற்கொலை செய்து கொள்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. காதல் தோல்வி, மன அழுத்தம், உறவுகள் இழப்பு, குடும்ப பிரச்சனை, தேர்வில் தோல்வி, தேர்வு பயம், கடன் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்கொலை ஒன்றே தீர்வுவாக அமைகிறது. 

இந்த இடத்தில் தான் நம் சமுதாயம் ஒரு மிகப்பெரிய தவறை செய்து வருகிறது. எந்த சூழ்நிலையையும் சமாளித்து போராடி அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர துணிவது கிடையாது. எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலையை தான் முடிவு என்று அதை தேர்வு செய்கின்றன. ஆனால், அதற்கு பின்னர் ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்துவிடுகின்றன.

இந்த காலத்தில் யாருக்கு தான் கஷ்டம் இல்லை, அதற்காக எல்லாவற்றிற்கும் தனது உயிரை மாய்த்துக் கொண்டால் இவ்வுலகில் மனித இனமே இருக்காது அல்லவா! 'இவ்வுலகில் உயிரை மாய்த்துக்கு கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது'. 

அந்தவகையில், தற்கொலை எண்ணம் எப்படி, ஏன் எழுகிறது, அதை எப்படி தவிர்ப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

தற்கொலை எண்ணம் எப்படி எழுகிறது?

❖ தற்கொலை எண்ணங்களுக்கும் மரபுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது, ஒரு குடும்பத்தில் யாருக்கேனும் மனஅழுத்தம், தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டிருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த மற்றயாருக்கேனும் அதுபோன்று தோன்றலாம்.

❖ இயலாமையின் வெளிப்பாடும் தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தலாம். அதாவது ஒருவர் இயற்கையாகவே இறந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் போவது அல்லது நெருங்கிய ஒருவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போவது போன்றவையும் அம்மாதிரியான எண்ணங்கள் எழ வைக்கலாம்.

❖ அடுத்ததாக, கடன் பிரச்சனை. இது உண்மையில் ஒருவரது உயிரையே பறிக்கும் அளவிற்கு கொடுமையானது. கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதிலிருந்து தப்பிக்க தேர்ந்தெடுக்கும் ஒரே வழி தற்கொலை. இப்படி பல காரணங்களால் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

தற்கொலை எண்ணங்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

❖ முதலில் நாம் நம்பலை நேசிக்க ஆரம்பிக்க வேண்டும். உணவிலிருந்து உடை வரை அனைத்து தேர்வுகளில் நமக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும். 

❖ எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, என்னால் இவ்வளவு தான் சம்பாதிக்க முடியும், இவ்வளவு இருந்தால் போது என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.

❖ அவர்களை போல நம்மால் இருக்க முடியவில்லையே என்று மற்றவர்களுடன் உங்களை இணைத்து, ஒப்பிட்டு பார்ப்பது முற்றிலும் தவறான செயல். ஒருபோதும் இம்மாதிரியான எண்ணங்களை மனதில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும்.

❖ பல விஷயங்களை கற்றுக்கொண்டிருப்போம், அவை எல்லாவற்றிற்கும் உடனடியாக அங்கீகாரம், பாராட்டு, புகழ் வேண்டும் என்று நினைக்காமல், தன்நம்பிக்கையோடு முயற்சிகளை தளராது முன்னெடுத்துப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இதுவும் கடந்துபோகும் போன்ற நேர்மறையான பதிலை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும்.

❖ இவ்வுலகில் எதுவும் எளிமையாகவும் உடனடியாகவும் கிடைத்துவிடாது. அந்தவகையில், என் திறமைக்கு மதிப்பில்லையா? என்று நமக்குள்ளேயே புலம்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெற்றியடைய வேண்டும் என்றால், திறமையோடு உழைப்பும் தேவை என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். 

❖ கொலை மிரட்டல், கடன் பிரச்சனை, தனி நபர் விரோதம், மொபைலில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டு மிரட்டப்படுவது போன்றவற்றால் உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று தற்கொலை தோன்றினால், தைரியமாக சட்ட உதவிகளை நாட வேண்டும். 

❖ முக்கியமாக, தற்கொலை எண்ணங்கள் வருபவர்கள் புகைப்பிடித்தல், மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எப்போதும் தனிமையில் இருக்காதீர்கள். நண்பர்களுடனோ, குடும்பத்தினருடமோ இணைந்திருங்கள்.  

❖ உங்கள் குடும்பத்துடன் மனம்விட்டு பேசுங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் என்றும் முதலிடத்தில் இருப்பவர்கள் அவர்களே. எனவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை மனதுக்குள் வைத்து மருகாமல், மனம்விட்டு தைரியமாக பேசுங்கள். அல்லது நண்பர்களிடம் பேசுங்கள். 

❖ தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது தயக்கம் காட்டாமல் உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பதும் நல்லது. அவர்கள் உங்களுடைய மனநிலைக்கு ஏற்ப கவுன்சிலிங் கொடுப்பார். 

❖ இறுதியாக, உங்கள் உறவினரோ, நண்பர்களில் ஒருவரோ உங்களிடம் வந்து 'எனக்கு வாழவே பிடிக்கல செத்துப்போயிடும்னு போல இருக்கு' என்று புலம்பினால், விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், அறிவுரைகளை வாரி கொட்டாமல், கேலி செய்யாமல், அவர்களுடைய பிரச்சனையை அவர்கள் இடத்தில் இருந்து புரிந்துக்கொண்டு, அவர்களை மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும். 

தனது உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு துணிச்சல் இருக்கும் உங்களுக்கு, இவ்வுலகில் வாழ்ந்துக் காட்டுவதா சிரமமாக இருந்துவிட போகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்