Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு பிடித்தவர்களாக மாற ஆண்கள் இத மட்டும் ஒழுங்கா பண்ணுனா போதுமாம்... 

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 20:20 [IST]
பெண்களுக்கு பிடித்தவர்களாக மாற ஆண்கள் இத மட்டும் ஒழுங்கா பண்ணுனா போதுமாம்... Representative Image.

ஆண்கள் வாழ்க்கையில் சரியான துணையை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்வார்கள். ஆனால், சில சமயங்களில் அவை சொதப்பலில் முடிந்துவிடுகிறது. உண்மையில் அனைவரையும் கவர்ந்திழுக்க சில குணங்களும் பண்புகளும் இருந்தாலே போதும். அந்தவகையில், பெண்களுக்கு பிடித்தவர்களாக மாற ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பொதுவான வழிகள் இருக்கின்றன. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

உடல்ரீதியாக கவர்ந்திழுக்க ஆரோக்கியமாகவும், பொருத்தமாகவும், நன்றாக உடையணிந்தவராகவும் இருக்க வேண்டும். ஸ்டைலாக இருக்கிறேன் என்று கண்டபடி உடை அணியாதீர்கள். உங்களது அழகே உங்களது எளிமையில் தான் இருக்கிறது.

தன்னுடைய வாழ்க்கையில் கனவுக்காகவும் லட்சியத்திற்காகவும் போராடும் ஆர்வமுள்ள ஆண்களை பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பிடிக்கும். 

பன்னீர் ரோஸ் ஃபேசியல் எப்படி செய்வது? 

கடினமான சூழ்நிலைகளில் ஸ்மார்ட்டாக சிந்திப்பது. அறிவார்ந்த உரையாடல்களில் ஈடுபடுவது போன்ற பண்புகள் மற்றவர்கள் உங்களை திரும்பி பார்க்க வைக்கும்.

தன்நம்பிக்கை, சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்காத ஆண்களை பலரும் வியர்ந்து பார்ப்பார்கள். எவ்வளவு கடினமான சூழ்நிலையில் நம்பிக்கை இழக்காமல் இருப்பதும் உங்களை ஒரு கவர்ச்சிகரமான மனிதனாக மற்றவர்களுக்கு காண்பிக்கும்.

எப்போதும் எந்த வகையான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவும் ஆண்களை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். எனவே, முடிந்த வரை உண்மையான அன்புடன் மற்றவர்களுக்கு உதவுங்கள். இதுவும் மற்றவர்களை கவர்ந்திழுக்கு ஒரு எளிமையான வழி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்