Mon ,Sep 26, 2022

Exclusive

உங்க சரும ரொம்ப வறண்ட சருமமா? இத மட்டும் பண்ணுங்க.. அப்பறம் பாருங்க மாயாஜலத்த..

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 16:20 [IST]
Representative Image. Representative Image.

How to Get White Skin Naturally at Home in Tamil: பளபளப்பான மிருதுவான சருமம் வேண்டும் தான் எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள். அதற்காக கிரீம்கள், ஃபேஸ் வாஷ், லேசர் டிரீட்மென்ட் என்று எண்ணற்ற முறைகளை கையாளுகிறார். ஆனால், அவை அனைத்தும் சருமத்திற்கு இயற்கையான அழகை கொடுப்பது இல்லை. இருப்பினும் நம்மில் பலரும் இம்மாதிரியான சரும பாதுகாப்பு முறைகளையே நோக்கி செல்கிறார்.


ரோஜா குல்கந்து செய்வது எப்படி?


உண்மையில், நம் அன்றாடம் ஒரு சில இயற்கை பொருட்களை பயன்படுத்தினாலே மிருதுவான பளபளப்பான சருமத்தை பெற இயலும். அந்த வகையில், நம்முடைய முகத்திற்கு மேலும் அழகை இயற்கையாகவே கொடுக்கக்கூடிய ஒரு பூ பன்னீர் ரோஜா. இதில் சிவப்பு பன்னீர் ரோஜா கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த பூவை பயன்படுத்தி சருமத்தின் அழகை எப்படி அதிகமாக்குவது என்று இப்பதிவில் பார்க்கலாம்.

ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

பன்னீர் ரோஸ் ஃபேசியல்:

முதலில் உங்க முகத்தை பால் அல்லது ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து நன்றாக துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பின்பு, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடுங்கள். அப்போது கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா, 2 கொத்து வேப்ப இலை, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், புதினா சிறிதளவு ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, இந்த தண்ணீரை விரிப்பு போட்டு மூடிக்கொண்டு முகத்தில் நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். அதாவது, சளிக்கு ஆவிப்பிடிப்போம் அல்லவா அதுபோல.

இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்…

5 நிமிடங்கள் ஆவி பிடித்துவிட்டு லேசான துணியால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் 1 கைபிடி அளவு ரோஜா இதழ், 1 ஸ்பூன் பன்னீர் (ரோஸ் வாட்டர்) ஊற்றி நைசாக அரைத்துக் கொண்டு அதை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும்.

பின்னர், அந்த கலவையில் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி, உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் 1 ஸ்பூன் தயிரையும் சேர்ந்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு 2 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்துவிட்டுங்கள்.

இதை 20 நிமிடம் ஊறவிட்டு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை கவனிப்பீர்கள்.

வீட்டிலேயே ஃபேசியல் செய்யலாம்... ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள்....

இதை தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கொப்புழம், எண்ணெய் பசை, கருவளையம், கரும்புள்ளிகள், பிளாக் ஹெட்ஸ் என எதுவுமே இருக்காது.

இந்த குறிப்பு பிடித்திருந்தால் வீட்டில் ஒருமுறை முயற்சித்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Tag: How To Make Rose Face Pack For Glowing And Clear Skin | How To Get White Skin Naturally At Home In Tamil | Rose Face Pack Benefits | How To Use Rose Petals For Skin | Rose Petals Face Mask Homemade | How To Use Rose Petals For Face In Tamil | Skin Whitening Tips At Home Naturally | How To Remove Pimples Naturally And Permanently.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts