Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Care For Your Nails at Home: உங்க கை நகங்களை எவ்வாறு பராமரிப்பது? லிட்டில் டிப்ஸ்…

Nandhinipriya Ganeshan August 25, 2022 & 14:20 [IST]
How to Care For Your Nails at Home: உங்க கை நகங்களை எவ்வாறு பராமரிப்பது? லிட்டில் டிப்ஸ்…Representative Image.

Nail Care at Home Tips: எல்லா பெண்களுக்கும் தன்னுடைய நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் கனவு காண்கிறார்கள். அழகான  நகங்களுக்காக எப்போதும் அவர்கள் பார்லருக்கு தான் செல்ல விரும்புகிறார்கள். ஆனால், அதை வீட்டிலேயே செய்யலாம். சரியான உணவு பழக்கம், தூய்மையாக இருத்தல் போன்றவற்றின் மூலமும் ஆரோக்கியமான நகங்களை பெறலாம். சலூன் அல்லது பார்லரில் உள்ள நிபுணர்களால் செய்யப்படும் நகங்களை ஒப்பிடும்போது அவை சமமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இருந்தாலும், அதையும் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க முறையான பராமரிப்பைப் (basic nail care tips) பின்பற்ற வேண்டும். 

நகங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருங்கள்

விரல் நுனியில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் எளிதில் தங்கிவிடும். எனவே, உங்கள் நகங்களை சுத்தமாகவும், உலர்ந்தாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்கு, உங்கள் நகங்களை அடிக்கடி கழுவவும், ஒவ்வொரு முறை கழுவிய பிறகும் அழுக்கு படியாம இருக்க ஒரு துண்டை பயன்படுத்தி சுத்தமாக துடைத்து விடவேண்டும். பிறகு, வாரத்திற்கு இருமுறையாவது, ஒரு டூத் பிரஷில் சிறிது உப்பை தடவி, நகங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள தோலை மெதுவாகத் தேய்த்து, கழுவுங்கள் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

நகங்களை ஈரப்பதமாக்குங்கள்

உங்களுடைய நகம் போதுமான அளவு ஈரப்பதத்தை பெற்றால் மட்டுமே வளரும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஈரப்பதம் இல்லமால் இருப்பதனால் தான் ஒரு சிலருக்கு தனாகவே நகங்கள் உடைந்து விழுகிறது. எனவே, இதை தடுக்க கிரீம் அல்லது எண்ணெய்களை தினமும் பயன்படுத்துங்கள்.

பாதுகாப்புக்கு கையுறைகளை அணியுங்கள்

வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் முக்கியமான கவலை பாத்திரங்களை சுத்தம் செய்வது. அவ்வாறு, செய்யும் போது பயன்படுத்தப்படும் சோப்புகள் இரசாயனங்கள் இருக்கும். இது கை தோல் மற்றும் நகங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த இரசாயனங்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க கையுறைகளை அணிந்து கொண்டு வேலை செய்யுங்கள். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கையுறைகளை நன்கு கழுவி, சூரிய ஒளியில் காய வைத்து மீண்டும் பயன்படுத்துங்கள்.

நகங்களை கடிப்பதை நிறுத்துங்கள்

நீங்கள் ஒவ்வொரு முறை நகங்களை கடிக்கும்போதும் கை மற்றும் நகங்களில் இருக்கும் கிருமிகள் எளிதில் வாயிக்குள் நுழைந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இதனால், பல பிரச்சனைகளுக்கு சந்திக்க நேரிடும். எனவே, நகங்களைக் கடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், நகங்களை கடிக்கும்போது உமிழ்நீர் அதன் மீது பட்டு பலவீனமாகவும், எளிதில் உடையக்கூடியதாகவும் ஆக்குகிறது.

நகங்களை வெட்டுங்கள்

சுத்தமாகவும், அழகாகவும் இருக்க, எப்போதும் உங்கள் நகங்களை வெட்டுங்கள் மற்றும் அவற்றை அதிகமாக வளர விடாதிங்க. நீண்ட நகங்கள் அடிக்கடி உடைந்து விடும், எனவே உங்கள் நகங்களை சின்னதாக வைத்துக்கொள்வது நல்லது. எப்போது நகம் வெட்டினாலும், குளித்தபின் வெட்டுங்கள். ஏனெனில், நகங்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். அதனால் வெட்டுவதற்கும் சிரமம் இருக்காது.

நெயில் பாலிஷை சுரண்ட வேண்டாம்

எல்லோரும் செய்யும் மிக பெரிய தவறு இதுதான். பிளேடு, கத்தி கொண்டு சுரண்டி எடுப்பார்கள். அப்படி செய்தால், நகங்கள் கரடுமுரடானதாகவும், நகத்தின் (nail care tips in tamil) அடர்த்தியையும் குறைத்துவிடும். 

நன்றாக சாப்பிடுங்கள்

ஆரோக்கியமான உணவு மூலம் எதனையும் சரி செய்யலாம். பொதுவாக, றையற்ற உணவுப்பழக்கம் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் நகப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, வலுவான மற்றும் ஆரோக்கியமான நகங்கள் வேண்டுமென்றால், உணவில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, புரதம், துத்தநாகம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை போதுமான அளவு சேர்த்து கொள்ளுங்கள். இந்த சத்துக்கள் அனைத்தும் கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்