Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்ட்ரெட்ச் மார்க்கை நிரந்தரமாக எளிதில் நீக்குவது எப்படி? | How to Remove Stretch Marks Permanently

Nandhinipriya Ganeshan August 23, 2022 & 16:30 [IST]
ஸ்ட்ரெட்ச் மார்க்கை நிரந்தரமாக எளிதில் நீக்குவது எப்படி? | How to Remove Stretch Marks Permanently Representative Image.

How to Remove Stretch Marks Permanently at Home in Tamil: திடீரென உடல் எடை கூடுதல் மற்றும் அளவுக்கு அதிகமான உடல் எடையால் ஏற்படக் கூடிய இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நம்மில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் கருவுறும் பொழுதும், பருவமடையும் பொழுதும் இயற்கையாகவே சருமம் விரிவடைந்து சுருங்கும். இதனால், உடம்பில் அக்குள் பகுதி, தொடை, தொடை பின் பகுதி, இடுப்பு, வயிற்றின் அடுப்பகுதி, மார்பு என பல இடங்களில் இம்மாதிரியான கோடுகள் உருவாகிவிடும். இதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் நிரந்தரமானதாக மாறிவிடுவதோடு, பார்ப்பதற்கும் அசிங்கமாக காட்சியளிக்கும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்கை நிரந்தரமாக எளிதில் நீக்குவது எப்படி? | How to Remove Stretch Marks Permanently Representative Image

இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. இதனால், அவர்கள் பல கிரீம்களையும் மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால், அதில் சேர்க்கப்படும் ஒரு குறிப்பிட்ட செயற்கை ரசாயனங்கள் நம்முடைய சருமத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இம்மாதிரியான ரசாயனம் நிறைந்த மருந்துகளை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே விரைவில் நீக்கிவிடலாம். 

அதற்கு 4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கடையில் வாங்காமல் இயற்கையாக செடியில் இருந்து பறித்து பயன்படுத்தினால் கூடுதல் பலன். 

இப்போது இந்த கலவையை உங்க உடம்பில் எங்கெல்லாம் ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 

ரொம்ப அழுத்தி மசாஜ் செய்ய வேண்டாம். இவ்வாறு செய்வதால் உடலில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். 

இவ்வாறு தினமும் குளிப்பதற்கு முன் செய்துவரலாம். இதனால், அசிங்கமாக இருக்கும் வெள்ளை கோடுகள் விரைவில் படிப்படியாக குறையும். 

ஸ்ட்ரெட்ச் மார்க்கை நிரந்தரமாக எளிதில் நீக்குவது எப்படி? | How to Remove Stretch Marks Permanently Representative Image

ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுப்பது எப்படி?

முதலில் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழக்காமலும், வறட்சி அடையாமலும் இருக்க வேண்டும். ஏனென்றால், இவை தான் ஸ்ட்ரெட்ச் மார்க் வர முக்கிய காரணம். அதற்கு தினமும் குறைந்தது 3-4 தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

எடை அதிகமாக இருப்பவர்கள் முறையான உடற்பயிற்சி செய்து சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் சருமம் சுலபமாக விரிவடையும் மற்றும் சுருங்கவும் செய்யும். இதனால், ஸ்ட்ரெட்ச் மார்க் எளிதாக மறைந்துவிடும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்