Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Clean Laptop Screen and Keyboard at Home: லேப்டாப், கீபோர்டை  பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 19:15 [IST]
How to Clean Laptop Screen and Keyboard at Home: லேப்டாப், கீபோர்டை  பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?Representative Image.

How to Clean Laptop Screen and Keyboard at Home: லேப்டாப் சாதனங்களை பொறுத்த வரையில் அவ்வப்போது சுத்தம் செய்தால், அதன் வாழ்நாளை நீட்டிக்க முடியும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக மாறிவது லேப்டாப்பும், கம்ப்யூட்டரும் தான். அதுவும் இந்த கொரோனா வந்ததிற்கு பிறகு லேப்டாப் மட்டும் தான் கதி என்று இருக்கிறோம். நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த பொருட்களில் மற்ற இடங்களில் இருக்கும் கிறுமிகளை விட பல மடங்கு அதிகமாக இருக்குமாம். 

அதனால், மவுஸ், கீபோர்டு, கம்ப்யூட்டர் போன்றவற்றை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் என நோய் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைக்கிறது. அதிக விலை கொண்ட பொருள் என்பதால் சற்று கவனத்தோடு சுத்தம் செய்வது நல்லது. இப்போது, லேப்டாப், கீபோர், மவுஸ் (how to clean my laptop screen and keyboard) போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்று இப்பதில் விரிவாக பார்க்கலாம். 

ஸ்டெப் 1: முதலில் உங்கள் லேப்டாப்பை ஷட் டவுன் (Show Down or Power Off) செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்க லேப்டாப் பேட்டரி அகற்றுவது போல இணைக்கப்பட்டிருந்தால், பேட்டரியை அகற்றிக் கொள்ளவும். அப்படி அகற்ற முடியாதவாறு அட்டாச்டு பேட்டரியாக இருந்தால் அகற்ற தேவையில்லை.

ஸ்டெப் 2: லேப்டாபின் கருப்பு ஸ்கிரீனின் (how to clean laptop screen at home) மீது மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். துணியை சதுர வடிவில் மடித்துக் கொண்டு இடது வலமாக லேப்டாப்பின் ஒரு மூலையிலிருந்து மறுமுலை வரை துடைக்கவும். 

துணியை நன்றாக உதறிவிட்டு, மறுபடியும் மேலிருந்து கீழாகத் துடைக்கவும். இவ்வாறு திரை முழுவதும் துடைக்க வேண்டும். குறிப்பாக, ரொம்ப அழுத்தம் துடைக்கக் கூடாது. ஏனெனில் ஸ்கிரீனில் கீரல்கள் விழ வாய்ப்புள்ளது.

குறிப்பு: எக்காரணத்திற்காகவும் லேப்டாப் ஸ்கிரீனை துடைக்க நியூஸ் பேப்பர், டிஷ்யூ பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.  

ஸ்டெப் 3: இப்படி துடைக்கும் போது ஸ்கிரீனில் ஏதேனும் எண்ணெய் பசை இருந்தால், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை காய்ச்சி, (ரொம்ப சூடாக இருக்க கூடாது) அதில் மைக்ரோஃபைபர் துணியை நனைத்து, நன்றாக பிழிந்து அதை முன்பு கூறியது போலவே இடது-வலது, மேல்-கீழ் என்ற திசையில் துடைக்கவும். 

குறிப்பு: இப்படி செய்வதற்கு முன்பு உங்களுடைய லேப்டாப் அணைந்திருக்கிறதா அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஸ்டெப் 4: கீபோர்டை சுத்தம் செய்ய, கடைகளில் விற்கும் அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய (how to clean laptop keyboard) வேண்டும். 

குறிப்பு: லேப்டாப்பை வாரத்திற்கு மூன்று முறையாச்சும் சுத்தம் செய்வது நல்லது. அதேபோல், எந்த கெமிக்கலையும் நேரடியாக தெளிக்க கூடாது. துணியில் தொட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

எத்தில் ஆல்கஹால், அசிட்டோன், அமோனியா, எத்தில் அமிலம், மெத்தில் குளோரைடு, மெத்தில் ஆல்கஹால், டோலுயீன் போன்ற கெமிக்கல் உள்ள கிளீனர்களை பயன்படுத்த வேண்டாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்