Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர்சாதானப் பெட்டியை சுத்தம் செய்வது எப்படி? | How to keep the refrigerator clean?

Vaishnavi Subramani Updated:
குளிர்சாதானப் பெட்டியை சுத்தம் செய்வது  எப்படி? | How to keep the refrigerator clean?Representative Image.

வீட்டிற்குத்  தேவையான காய்கறிகளை விலை குறைவில் அதிக  காய்கறிகளை வாங்கி அதனை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் சமைத்த உணவுகள் மற்றும் பழங்கள் அதனுடன் சாக்லாட்டுகள், தண்ணீரைக்கூட  குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்கிறோம்.அதனால் அதை பராமரிப்பது சுத்தமாக வைத்துக் கொள்வது  என்பது மிகவும் அவசியமான ஒன்று.அதனால் குளிர்சாதனப் பெட்டியை எப்படி சுத்தம் செய்வது என்பதை இங்குப் பார்க்கலாம். 

குளிர்சாதானப் பெட்டியை சுத்தம் செய்வது  எப்படி? | How to keep the refrigerator clean?Representative Image

குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்யும் வழிமுறைகள்

படி1

  • குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்யும் முன்பு, அதனை முதலில்  அணைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து பெட்டியின் அறை வெப்பநிலை உள்ளதா எனப் சாரிப்பார்க்க வேண்டும்.

படி2:

  • குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து வெளியே வைத்த பிறகு,பெட்டியின் உள்ளே உள்ள அனைத்து அடுக்களையும் கழற்ற வேண்டும்.

  • அதன் பிறகு, அந்த அடுக்குளின் உள்ளே  பல கறைகள், அழக்குகளை ,சுத்தம் செய்வதற்குப் பாத்திரம் துலக்கும் சோப்பு மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு நன்குச் சுத்தம் செய்ய வேண்டும்.

குளிர்சாதானப் பெட்டியை சுத்தம் செய்வது  எப்படி? | How to keep the refrigerator clean?Representative Image

படி3

  • இப்போது பெட்டியின் உட்புறம் சுத்தம் செய்வதற்கு, சிறிதளவு வெந்நீர் உடன் காட்டன் துணி, வினிகர்/எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.

  • அதன் பின்  குளிர்சாதனப் பெட்டியின் வெப்ப நிலை அறைவெப்பநிலையாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்

  • வெந்நீருடன் எலுமிச்சை சாறு / வினிகர் சேர்த்துக் கொண்டு காட்டன் துணியை நனைத்துப் பெட்டியின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நன்றாகத் துடைத்துக் கொள்ளவும். வினிகர் பயன்படுத்துவதன் மூலம் கறைகள் மற்றும் அழுக்குகள் நன்றாகச் சுத்தம் செய்ய உதவும்.

படி4

  • பெட்டியின் உள்ளே உள்ள ஃப்ரீஸரையும் மேலே கூறப்பட்டதை போல் சுத்தம் செய்யவும்.

படி5

  • பெட்டியின் வெளிப்புறம் மற்றும் கைப்பிடியையும், காட்டன் துணியைச் சோப் திரவியத்துடன் நனைத்து நன்றாகத் துடைக்கவும்.

  • இப்படித் துடைப்பதால் பெட்டியின் மேல் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய் போன்ற பிசுபிசுப்பான அழுக்குகள் எளிதில் சுத்தமாகும்.

  • அதன் பின் ஒரு உலர்ந்த துணியை கொண்டு பெட்டியைச் சுத்தம் செய்யவும்.

படி6

  • பெட்டியின் உட்புறம் நன்றாக உலர்ந்த பின், குளிர்சாதனப் பெட்டியை ஆன் செய்யவும்.

  • அதன் பின், பெட்டியின் அடுக்குகள் மற்றும் டோர், வெப்பநிலையைப் பொருத்திய பிறகு,உணவுப் பொருட்களை உள்ளே வைத்துக் கொள்ளவும்.

இந்த வழி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டியில் உள்ள குளிர்சாதன பெட்டியை எளிதில்  பராமரித்துக்  கொள்ளலாம்.

குளிர்சாதானப் பெட்டியை சுத்தம் செய்வது  எப்படி? | How to keep the refrigerator clean?Representative Image

கவனிக்க வேண்டிய விஷங்களைப் பார்க்கலாம்

  • உணவுப் பொருட்களைப் பெட்டியில் வைப்பதற்கு முன் இடைவெளியைப் பயன்படுத்த வேண்டும்.

  • ஒருவாரம் ஆனாலும், பழைய குழம்புகள் மற்றும் சட்னி வகை பொருட்களைப் பெட்டிலிருந்து அப்புறப்படுத்தவும்.

  • பெட்டியில் உணவு பொருட்கள் சிந்தியிருந்தால் அதனைச் சுத்தம் செய்து விடவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்