Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீட்டில் உள்ள டிவியை சுத்தம் செய்வது எப்படி | How to clean TV at home

Vaishnavi Subramani Updated:
வீட்டில் உள்ள டிவியை சுத்தம் செய்வது எப்படி | How to clean TV at homeRepresentative Image.

இப்பொழுது அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கும். வீட்டில் ஒருவராவது தொலைக்காட்சிகள் பார்ப்பது என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அந்த டிவியை சுத்தம் செய்வதைப் பற்றி யாரும் நினைக்க மாட்டார்கள். பல வீடுகளில் டிவியில் பல தூசிகள் மற்றும் அழுக்குகள் இருக்கும் அதனைச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவார்கள். சரிவாங்க வீட்டில் உள்ள டிவியை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் உள்ள டிவியை சுத்தம் செய்வது எப்படி | How to clean TV at homeRepresentative Image

டிவி சுத்தம் செய்யும் முறைகள்

பல வகையான டிவிகள் உள்ளது. அதில் LED, OLED, QLED போன்ற புது ரக டிவிகள் மற்றும் பழைமையான டிவிகள் என அனைத்து டிவிகளைய எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

✤ முதலில் டிவியை சுத்தம் செய்வதற்கு டிவியுடன் தொடர்பில் உள்ள அனைத்து மின் இணைப்புகளை அணைக்கவும்.

✤ அதற்குப் பின் டிவியில் உள்ள அனைத்து கேபிள் மற்றும் மின் கம்பிகளை அகற்றவும். இதனைச் செய்வதன் மூலம் மின்சாரத்தினால் எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம்.

✤ முதலில் டிவிக்கு பின்பகுதியில் இருக்கும் தூசிகளைச் சுத்தம் செய்வதற்கு முதலில் சின்ன அளவு பிரஷ்ஷை எடுத்து நன்றாக சின்னசின்ன இடங்களில் இருக்கும் தூசிகளை அகற்றவும்.

வீட்டில் உள்ள டிவியை சுத்தம் செய்வது எப்படி | How to clean TV at homeRepresentative Image

✤ பழைய டிவி என்றால் டிவியில் கேபிள்கள் இணைக்கும் பகுதிகள் டிவியின் உள்ள பக்கத்தில் இருக்கும் அங்கு நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும்.

டிவியின் முன்பக்கத்தில் உள்ள திறைகளைத் தண்ணீர் தெளித்துத் துடைக்கக் கூடாது. தண்ணீர் தெளித்துத் துடைத்தால் LED மற்றும் புதிய ரக டிவிகளில் உள்ள திரையில் தண்ணீர் தெளித்தால் அது உள்ளே உள்ள பாகங்களில் நீர் தேங்கி சில நாட்கள் பிரச்சனை ஏற்படுத்தும்.

பழைய டிவிகளில் துடைத்தால் அதில் உள்ள படம்காட்டும் இயந்திரத்தில் நீர் தேங்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மின்சார சாதனைகளைச் சுத்த செய்வதற்குப் பயன்படுத்தும் ஸ்ப்ரேபாட்டிலை கடைகளில் வாங்கி அதை ஒரு மென்மையான துணி அல்லது மைக்ரீ ஃபையர்  துணியை எடுத்து அதில் ஸ்ப்ரே செய்யவும்.

அந்த துணியை டிவியில் உள்ள ஒரு திசையில் ஆரம்பித்து செங்குத்தாக அல்லது கிடைமட்டமாகத் துடைத்து உடன் அதன் எதிர்த் திசையில் இதே போன்று துடைத்தால் டிவியை முழுவதுமாக துடைக்கலாம்.

அதன் பின் மற்றொரு காட்டன் துணியில் எந்தவிதமான ஈரம் இல்லாதா துணியை எடுத்து மெதுவாகத் துடைத்தால் டிவியில் உள்ள அனைத்து தண்ணீரும் முழுவதுமாக வந்துவிடும்.

✤ துடைத்த உடனே டிவியை ஆன் செய்யாமல் அதை 10 முதல் 20 நிமிடங்கள் உலரவிடவும். அதன் பின் மின் இணைப்புகளை இணைத்து அதற்குப் பின் டிவியை ஆன் செய்து பார்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்