Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Convince Parents for Love Marriage in Tamil: பெற்றோரை உங்க காதல் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கணுமா?

Nandhinipriya Ganeshan July 19, 2022 & 13:00 [IST]
How to Convince Parents for Love Marriage in Tamil: பெற்றோரை உங்க காதல் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கணுமா?Representative Image.

How to Convince Parents for Love Marriage in Tamil: இந்த நவீன காலத்திலும் பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணத்தை விட, பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணமே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர். ஆனால், நம் இளைய தலைமுறைனரோ காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலையே கொள்வது கிடையாது. பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள், தன் வீட்டில் என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என எதை பற்றியும் சிந்திப்பது இல்லை. ஏதோ ஒரு வழியில் காதல் துளிர்விட ஆரம்பித்துவிடுகிறது. அது கருகிப்போவதற்குள் எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்பதே இன்று எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் எண்ணம்.

இதனால், காதல் எவ்வளவு முக்கியமோ அதைவிட பெற்றோர் முக்கியம் என்பது தெரிந்தாலும், பெற்றோர் சம்மதமின்றி அவசரமாக நான்கு நண்பர்கள் முன்னிலையில் ஆயிரம் காலத்து பயிரினை நடத்திவிடுகின்றன. இப்படி அவசர அவசரமாக கல்யாணம் செய்து, இல்லற வாழ்க்கை சந்தோசமாக இருந்தால் பிரச்சனை இல்லை. அதுவே வயது கோளாறால் காதலித்து அது கல்யாணத்தில் முடிந்து இல்லற வாழ்வில் பிரச்சனை வரும்போது தான் பெற்றோர்கள் அவர்களுடைய கண்களுக்கு தெரிவார்கள்.

அவர்கள் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை காலம் கடந்து யோசித்து சங்கடபடுவதை விட காதலிக்கும்போதே அதை பெற்றோரிடம் சொல்லி அவர்களுடைய விருப்பத்தை அறிந்துக் கொள்வது நல்லது. சில பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்திற்காகவும், சந்தோசத்திற்காகவும் எளிதில் சம்மதம் தெரிவித்துவிடுவார்கள். ஆனால், பலர் என்னதான் முட்டி மோதினாலும் வேலைக்கே ஆகாது. அப்படிபட்டவர்களிடம் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க சில முறைகளை கையாளலாம்.

❖ திருமணத்தை  பற்றி பேசும் முன் உங்கள் பெற்றோருக்கு சிறிது நேரம் கொடுங்கள்.

❖ அவர்கள் உங்க காதலனை அல்லது காதலரை வெறுப்பதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்.

❖ அந்த காரணத்தை பற்றி உங்க காதலரிடம் பேசாதீர்கள்.

❖ சிறிய வயதிலிருந்து பாசத்தோடு அன்போடு வளர்த்தவர்கள், அவர்களிடன் மனம்விட்டு பேசுங்கள்.

❖ அவர்களுடைய இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள். இது உங்கள் காதலை அவர்களிடம் பக்குவமாக எடுத்து சொல்லவும், சமாதானப்படுத்தவும் பெரிதும் உதவும்.

❖ உங்களுடைய விருப்பத்தை பெற்றோருக்கு நல்ல முறையில் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.

❖ எதிலும் அவசரம் வேண்டாம், பொறுமையாக இருந்து உங்க காதலை அவர்களுக்கு நிரூபியுங்கள்.

❖ பெற்றோர்களை எக்காரணத்திற்காகவும் வெறுத்து மட்டும் விடாதீர்கள்.

❖ பெற்றோரின் விருப்பத்தின் படி உங்க காதலரின் நடவடிக்கைகளை மாற்ற முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

❖ உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

ஆனால், பெற்றோர்கள் அந்தஸ்து, வறட்டு கௌரவம், ஜாதி, மதம் போன்ற காரணங்களுக்காக உங்க காதலை எதிர்க்கும் போது இந்த வழிகள் அனைத்தும் கைக்கொடுக்காமல் போகலாம். அந்த நேரத்தில் உங்க காதலின் மீது முழுமையான அழிக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் நன்றாக சிந்தித்து உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

Tags:

Love marriage convince parents | How to convince our parents for love marriage | Love Marriage | How to convince parents for love marriage in different caste | How to convince parents for love marriage in different caste in tamil | How to convince parents for love marriage in same caste in tamil | Best way to convince parents for love marriage | How to convince parents for love marriage in india


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்