Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Decorate Birthday Party: பிறந்தநாள் பார்ட்டிக்கு இப்படி வீட்டை அலங்கரித்துப் பாருங்க…! பார்ட்டிக்கு வரவங்க பிரமித்து நிப்பாங்க….

Gowthami Subramani June 26, 2022 & 15:15 [IST]
How to Decorate Birthday Party: பிறந்தநாள் பார்ட்டிக்கு இப்படி வீட்டை அலங்கரித்துப் பாருங்க…! பார்ட்டிக்கு வரவங்க பிரமித்து நிப்பாங்க….Representative Image.

How to Decorate Birthday Party: எல்லோருக்குமே வீட்டை அழகாக வைத்திருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் எதாவது ஃபங்ஷன் என்றால் சொல்லவா வேண்டும்…? முதலில் நம் வீட்டை எப்படி அழகு படுத்தலாம் என்று தான் நினைப்போம். அந்த வகையில், பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டையே தலைகீழாக புரட்டி விடுவர். வீட்டுக்கு வருபவர்கள் வாயடைத்துப் போகும் வகையில், வீட்டை அழகுபடுத்துவர் (How to Decorate Birthday Party).

இப்போதெல்லாம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிறந்தநாள் பார்ட்டி என தெரிந்தவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து கொண்டாடுவர். அந்த சமயத்தில் வீட்டை எவ்வாறு அழகுபடுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒளி விளக்குகள்

ஒளி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அனைவரும் விரும்பும் ஒளி விளக்கு மிகுந்த கொண்டாட்டத்தைத் தரும். மேலும், Fairy Lights எனக் கூறப்படும் சிறிய அளவிலான ஃபேன்ஸி விளக்குகளை சுவரிலும், அறையிலும் ஒளிரவிடலாம். இவ்வாறு செய்வதால், வீட்டிற்கு பிறந்த நாள் கொண்டாட வருபவர்களுக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி உண்டாகும். சுற்றியிறுப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் (Birthday Celebration Party).

சுவர் அலங்காரங்கள்

“Happy Birthday” என ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, பல்வேறு வகைகளில் டிசைன் டிசைனாக சுவர்களில் அலங்காரம் செய்தவாறு பேனர்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சுவற்றில் ஒட்டுவதன் மூலம் வீடு முழுவதுமே கலர் கலராக ஜொலிக்கும். கடையில் வாங்கி பேனர்களை ஒட்டுவதை விட, வீட்டிலேயே கையெழுத்தால் தயாரித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

டிஷ்யூ

டிஸ்யூ பேப்பரைக் கொண்டு பல வகையான அலங்காரங்களைக் கொண்டும் டிசைன் டிசைனாக டிஸ்யூக்களை வாங்கி, மலர்கள் போன்றோ, பந்துகள் போன்றோ பல்வேறு வடிவங்களில் வீட்டில் உள்ளவற்றைக் கொண்டு அலங்கரிக்கலாம். இவ்வாறு, டிசைன் டிசைனாக செய்து வீட்டில் வைப்பது அனைவரையும் ஈர்க்கும் (Tips for Birthday Celebration).

தீம் வைத்து அலங்காரம்

பொதுவாக குழந்தைகளுக்காக, பார்பி, ஸ்பைடர் மேன், ஃபேரி டேல்ஸ் போன்ற தீம்கள் பிடிக்கும். இவற்றை வைத்து பிறந்தநாள் பார்ட்டிகள் திட்டமிடப்படுகின்றன. பார்ட்டிகளில் தீமுக்கு ஏற்ற அலங்காரத்தை வடிவமைக்கலாம். உதாரணமாக, பார்ட்டிக்கு வருபவர்கள் அனைவரும் வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வருவது வழக்கம். உங்களது கற்பனைத் திறன்களை வளர்த்திக் கொண்டு வீட்டை சிறப்பாக அலங்காரம் செய்யலாம். அதன் படி, பார்ட்டிகளில் வித்தியாசமான அனுபவமும், சந்தோஷமும் கிடைப்பதாக இருக்கும்.

வீட்டை அலங்கரிப்பது பற்றிய டிப்ஸ் (Birthday Celebration Tips in Tamil)

  • வீட்டை அலங்கரிப்பதற்கு முன், அதனை சுத்தப்படுத்த வேண்டும்.
  • விருந்தினர்களின் வருகைக்கு ஏற்றவாறு இருக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • பார்ட்டிற்காக வீட்டிற்கு வரும் நபர்களுக்கு ஏற்ற பல்வேறு விதமான வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
  • மேலும், இண்டோர் பிளான்டுகள் வைப்பதன் மூலம், நன்மையை பெறலாம்.
  • விருந்தினர்களை உற்சாகப்படுத்த கேம்ஸ் கன்டக்ட் செய்து அவர்களை மகிழ வைக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்