Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to do Anti-Ageing Skin Care: உங்கள ஆன்டின்னு சொல்றாங்களா...இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! அப்புறம் உங்கள பியூட்டின்னு கூப்பிடுவாங்க!

Priyanka Hochumin July 10, 2022 & 12:00 [IST]
How to do Anti-Ageing Skin Care: உங்கள ஆன்டின்னு சொல்றாங்களா...இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! அப்புறம் உங்கள பியூட்டின்னு கூப்பிடுவாங்க!Representative Image.

How to do Anti-Ageing Skin Care: நமக்கு என்ன தான் வயதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் அதிகப்படியானவர்கள் ஆசைப்படுவது. அது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

படையப்பா படத்தில் நீலாம்பரி நமது சூப்பர் ஸ்டாரைப் பார்த்து சொல்லுவார், வயசானாலும் உன்னுடைய அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னைய விட்டு போகல. அது போல தான் நம்மளும் இருக்கனும் என்று ஆசைப்படுவோம். ஆனால் வயதாவது என்பது இயற்கை செயல் அதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஒழுங்கான சரும பராமரிப்பால் நமது சருமம் வயதாவதை சாற்றி தடுக்க முடியும். இப்படி செய்து பாருங்கள், 50 வயதானாலும் 30 வயதானவர் போன்று காட்சியளிப்பீர்கள். அதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ் இதோ.

1. எக்ஸ்ஃபோலியேட் 

சருமத்தின் மேல் பகுதியில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும் செயலைத் தான் எக்ஸ்ஃபோலியேட் என்று கூறுவார்கள். இது எதற்காக செய்ய வேண்டும் என்றால், நம் முகத்தில் படியும் தூசிகளால் சருமத் துளைகள் அடைக்கப்படுகிறது. இது பரு, சரும பிரச்சனை, முகப்பொலிவு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்.

2. க்ளென்சர் யூஸ் பண்ணுங்க

நமக்கு இயற்கையாகவே சருமத்தில் ஈரப்பதம் மற்றும் முகத்தில் எண்ணெய் சுரக்கும் போன்றவை இருக்கும். இவை வயதாகும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. அந்த சமயத்தில் நாம் நுரை அதிகம் எற்படுத்தும் சோப்புகளை பயன்படுத்துவது எவ்ளோ பெரிய தவறு தெரியுமா? அதற்கு பதிலாக காலை மாலை க்ரீம் க்ளென்சரை பயன்படுத்துங்கள். இதை அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்து சருமத்தை பராமரிப்பதன் மூலம் தோலின் மேற்பக்கத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். 

3. மாய்ஸ்ச்சரைசர்

நீங்கள் கவனித்திருக்கீர்களா பொதுவாகவே பருவம் மாறும் பொழுது சருமத்தில் மாற்றங்கள் ஏற்படும். நமது உடலில் இருக்க வேண்டிய ஈரப்பதம் இல்லாமல் போனால் வறண்ட சருமம் ஏற்படும். அதே போல தான் வயதானாலும் சருமத்தில் ஈரப்பதத்தை குறையாமல் பாதுகாக்க காலை மற்றும் மாலை மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதை முகம் மட்டுமல்லாது கழுத்து மார்பு ஆகிய பகுதிகளிலும் பயன்படுத்துங்கள்.

4. கட்டாயம் சீரம்

நமக்கு வயதாகும் போது செல் மீளுருவாக்கம் (Cell regeneration) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறையும். இதனால் வறண்ட சருமம் உருவாகும், இதனை தவிர்க்க தினமும் முகத்தை கழுவிய பின்பு சீரம் அப்ளை செய்யவும். இது சருமத்தை மென்மையாக்கி, புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

5. ஃபேஷியல் ஆயில் தி பெஸ்ட்

முன்பே கூறியது போன்று தான் வயதாகும் பொழுது முகத்தில் எண்ணெய் உற்பத்தி குறியும். அதனால் முகத்தில் மாய்ஸ்ச்சரைசர் தடவிய பின்பு ஃபேஷியல் ஆயில் அப்ளை பண்ணுங்க.

இறுதியாக தூங்க போவதற்கு முன்பு மேக் அப்பை அகற்றி விட்டு தூங்க செல்லுங்கள். பிறகு நிம்மதியான தூக்கம் பல நோய்களை மட்டும் அல்ல அழகையும் மீட்டுத் தரும்.

How to do anti ageing skin care, face tips in tamil, beauty tips for face at home in tamil

உடனுக்குடன் செய்திகளை (Beauty Tips) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்