How to Eat Dry Grapes to Increase Hemoglobin: நமது உடலில் உண்டாகும் சில லேசான அடிப்படை பிரச்சனைகளை நாம் சாப்பிடும் உணவுகள் மூலமே சரி செய்துவிட முடியும். அந்த வகையில், அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பழங்களை விட எப்போதாவது எடுத்துக்கொள்ளும் உலர்ந்த பழங்களில் சத்துக்கள் சற்று கூடுதலாகவே காணப்படுகின்றன. பொதுவாக, உலர்ந்த பழங்களை பெரும்பாலானோர் விரும்பமாட்டார். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொண்டால் தவிர்க்கவே மாட்டார்கள். அதன்படி, உலர்ந்த பழங்களில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உலர் திராட்சை தான். பொதுவாக உலர் திராட்சை பச்சை, கருப்பு, கோல்டன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. நார்ச்சத்து நிறைந்த இந்த பழத்தை வெறுமனே சாப்பிடுவதை காட்டிலும் தண்ணீர் ஊற வைத்து சாப்பிட்டால் பலன் கூடுதலாக (Soaked Dry Grapes Benefits In Tamil) கிடைக்கும்.
உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இதனை தினமும் இரவில் படுக்கும் போது தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதனால் இரத்த சோகை குணமாவதோடு; வரவும் வராது.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், ஒரு கப் நீரில் 15-20 உலர் திராட்சையை போட்டு கொதிக்க வைத்து, மசித்து அதை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் கிடையாது. அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
ஒரு லிட்டர் தண்ணீர்ல் 20-25 உலர் திராட்சையை போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக இந்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியை அளிக்கும்.
Tags:
Soaked raisins benefits in tamil, Soaked dry grapes benefits, How many soaked raisins to eat daily, How many black raisins to eat per day, How to eat dry grapes in tamil, How to eat dry grapes to increase hemoglobin
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…