Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆரோக்கியமான மற்றும் ஜொலி ஜொலிக்கும் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்...!

Nandhinipriya Ganeshan September 10, 2022 & 20:30 [IST]
ஆரோக்கியமான மற்றும் ஜொலி ஜொலிக்கும் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்...!Representative Image.

Daily Face Care Tips in Tamil: அழகான மற்றும் குறைபாடற்ற தோல் என்பது இளமையாக இருப்பதற்கான மிகவும் கவர்ச்சியான அறிகுறிகளில் ஒன்றாகும். நல்ல தூக்கம், நிறைய தண்ணீர், மற்றும் மனஅழுத்தம் இல்லாமை ஆகியவை இளமை மற்றும் குறைபாடற்ற தோற்றத்திற்கு மிகவும் அத்தியாவசியமான மற்றும் அடிப்படையான விஷயங்களில் சில. மேலும், பளபளப்பு மற்றும் பளபளப்பை பராமரிப்பதில் சரியான உணவு  முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

அந்த வகையில், பெண்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்காக படாதபாடுபடுகிறார்கள். இதற்காக, அழகு நிலையங்களுக்கு சென்று நிறைய டிரீட்மெண்ட்ஸ்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், அவ்வளவு சிரமம் தேவையே இல்லை. நீங்க இயற்கை முறையில் பளபளப்பான ஆரோக்கியமான (skin beauty tips in tamil) சருமத்தை வீட்டிலிருந்து பெறலாம். அதற்கு, நீங்க கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தாலே போதுமானது.

தேன் மாஸ்க் (Honey mask)

பல நூற்றாண்டுகளாக, பெண்கள் சிறந்த தோல் நிறத்தைப் பெறுவதற்கு தேனை பயன்படுத்து வருகின்றனர். தேன் சரும துளைகளை சுத்தப்படுத்தவும், கரும்புள்ளிகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை மெதுவாக நீக்கி, முகம் மற்றும் சருமத்தை பொலிவாக்குகிறது. எனவே, சிறிதளவு சுத்தமான தேனை எடுத்து உங்களுடைய முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இவ்வாறு செய்து வர பளீச் சருமத்தை விரைவில் பெறுவீர்கள்.

குளியல் உப்பு 

எப்சம் உப்பு (Bath Salt) இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருள் என்பதால் பலவித மந்திரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது. எப்சம் உப்பில் முக்கியமாக மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது. இதனால், சருமத்திலுள்ள இறந்த செல்களை சரி செய்வதற்கு இந்த எப்சம் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு கலந்த நீரில் குளிக்கும் போது, நமது சருமத்தை மிருதுவாக்கவும், வறண்ட மற்றும் எரிச்சலூட்டும் சருமத்தை சரி செய்யவும் உதவுகிறது. இதனாலையே, பலரும் இந்த குளியலை பரிந்துரைக்கின்றனர்.

துணி ஸ்க்ரப்

உங்களிடம் எந்த ஸ்க்ரப் வசதியும் இல்லை என்றால், துணி ஸ்க்ரபர்கள் கடைகளில் கிடைக்கின்றன. கைகளில் தேய்த்து குளிப்பதற்கு பதிலாக, இந்த மாதிரியான துணிகளை பயன்படுத்தி குளிப்பதால், இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவுகிறது. துணி ஸ்க்ரப் தோலை மென்மையாகவும் மிருதுவானதாகவும் மாற்ற உதவுகிறது.

முட்டைக்கோஸ் இலை

முட்டைக்கோஸில் வைட்டமின் சி உள்ளது, இது உங்க சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கவல்லது. முட்டைக்கோஸில் உள்ள சாறு உங்க சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு முகப்பரு, தோல் வெடிப்பு, தோல் எரிச்சல், அலர்சி போன்ற பிரச்சனைகள் இருந்தால், நீங்க உணவில் முட்டைக்கோஸை அதிகளவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

புளிப்பு கிரீம் (Sour Cream)

பழங்காலத்திலிருந்தே, புளிப்பு கிரீம் ஒரு ஒப்பனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல், அலற்சி போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் துளைகளை இறுக்கவும், சுருக்கங்களை மென்மையாக்கவும், வெண்மையாக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை உறுதியாகவும், மீள்தன்மையுடனும் வைக்கிறது.

ஆலிவ் ஆயில்

சருமத்தை அழகுப்படுத்துவதில் ஆலிவ் ஆயில் முதல் இடம். இது சருமத்தில் இருக்கும் துளைகளை குணப்படுத்தவும், சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், மிருதுவாகவும், வைத்திருக்கம். தினமும் இரவு நேரத்தில் இந்த எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு, அடுத்த நாள் என்று குளித்து வர தோலில் அற்புதமான மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

அரோமாதெரபி மசாஜ்

மசாஜ் பல இளம் பெண்களின் விருப்பமாக இருந்து வருகிறது. மசாஜ் ஆயில்களை கொண்டு மசாஜ் செய்யும் போது, அது தசைகளை தளர்த்தவும், அமைதிப்படுத்தவும், சுழற்சியை அதிகரிக்கவும், திசுக்களைத் தூண்டவும் உதவுகிறது. மேலும், நச்சுகளை வெளிவேற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மசாஜ் செய்த பிறகு நீங்கள் புத்துணர்ச்சியுடனும் மன அமைதியுடனும் உணர்வீர்கள்.   

இயற்கை களிமண்

களிமண் தங்கள் சருமத்தை விரும்பும் எந்தவொரு பெண்ணுக்கும் இன்றியமையாதது. இது சருமத்தில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் சுத்திகரிப்பு மற்றும் நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கனிமங்கள் நிறைந்த, களிமண் கறைகள், கழிவுத் துகள்களை அகற்றி, பளபளப்பான நிறத்தை அளிக்கிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்தில் இருக்கும் இறந்த சரும செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது சூரிய ஒளியில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறன்கள் இயற்கையாகவே காணப்படுகின்றன. அதனாலையே, தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது சருமத்துளைகளை குறைப்பதன் மூலம் எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதை தோல் டானிக் என்றும் சொல்லுவார்கள். இது நோய்க்கிருமிகளை கொன்று, தோலை (glowing skin tips in tamil) பாதுகாக்கிறது. மேலும், அனைத்து விதமான தோல் புண்களையும் குணப்படுத்தும் பண்பு கொண்டது. அதுமட்டுமல்லாமல், இது உங்க தோலின் pH அளவையும் சமநிலைப்படுத்துகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்